Valimai Movie Trimmed: ‘வலிமை’ குறித்த புதிய அப்டேட் - ரசிகர்களுக்காக அஜித்தின் அதிரடி முடிவு...!
Valimai Movie Trimmed: இந்தி பதிப்பில் 15 நிமிட டிரிம்மிங் ஒருபுறம் இருக்க, தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து முதல் பாடலான நாங்க வேரா மாரியையும் நீக்கியுள்ளனர்.

வலிமை(Valimai) படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அஜித்குமார் நடிப்பில் உருவான ஆக்ஷன் த்ரில்லர் படமான 'வலிமை', தமிழ்நாடு முழுவதும் நேற்று வெளியாகி சாதனையை படைத்தது. இப்படம் முதல் நாளில் சுமார் 28.25 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் சர்க்கார் படத்திற்கு அடுத்தபடியாக தமிழ்த் துறையில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது பெரிய படமாக உள்ளது. எச் வினோத்தின் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், சில கடுமையான விமர்சனைகளையும் சந்தித்துள்ளது.
குறிப்பாக இரண்டாம் பாதி நீளமாக உள்ளதாக ரசிகர்கள் கூறினார்கள். ரசிகர்கள் இந்த கருத்து அஜித் குமார், போனி கபூர், எச் வினோத் மற்றும் ஒட்டுமொத்த வலிமை குழுவின் காதுகளை எட்டியுள்ளது. இதனைத்தொடர்ந்து, படத்தின் காட்சிகளை குறைக்க, படக்குழு தானாக முன்வந்து படத்தின் காட்சிகளை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழில் 12 நிமிடங்கள் குறைக்கப்படுவதாகவும், இந்தியில் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தி பதிப்பில் 15 நிமிட டிரிம்மிங் ஒருபுறம் இருக்க, தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து முதல் பாடலான நாங்க வேரா மாரியையும் நீக்கியுள்ளனர். அதாவது 18 நிமிடங்களுக்கு மேல் வெட்டப்பட்டது.
நீக்கிய காட்சிகளுடன் இன்று மாலை காட்சிகளில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாழனை விட வெள்ளியன்று வலிமையின் டிக்கெட் விலை குறைந்துள்ளதாகவும், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் ஒரு நாளைக்கு 4 காட்சிகளுடன் திரையிடப்படுகிறது.
மற்றொரு தகவல் என்னவென்றால், படத்தின் 14 நிமிடங்கள் காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பதிப்பு நாளை முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
#Valimai - 14 mins of the film has been trimmed now, new version will be screened in theatres from tomorrow!
— Siddarth Srinivas (@sidhuwrites) February 25, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

