![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Valimai Update: தீபாவளியை விட்டு விலகும் வலிமை? போனிகபூர் போடும் புது ப்ளான்!?
அஜித்தின் வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியீடு தள்ளிப்போகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
![Valimai Update: தீபாவளியை விட்டு விலகும் வலிமை? போனிகபூர் போடும் புது ப்ளான்!? Ajith starrer Valimai not to be released on Diwali Valimai Update: தீபாவளியை விட்டு விலகும் வலிமை? போனிகபூர் போடும் புது ப்ளான்!?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/16/3d768db391d1d8eb6f0f10cfad801077_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வலிமை, அஜித் ரசிகர்கள் வேறு எந்தவொரு திரைப்படத்தையும் இவ்வளவு தூரம் எதிர்பார்ப்பு வைத்ததில்லை என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு வலிமை அப்டேட் கேட்டு கால்பந்து, கிரிக்கெட் மைதானங்களில் கூட பேனர் பிடித்து சர்வதேச அளவில் திரைப்படத்துக்கு விளம்பரம் தேடிக் கொடுத்திருந்தனர். அதன்பின்னர் வலிமை அப்டேட் ரசிகர்களுக்காக அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகிறது. போனி கபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்க அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி இணைந்துள்ளார். படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் எனப் பலரும் நடிக்கின்றனர். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. அத்துடன் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
தள்ளிப்போகும் ரிலீஸ்..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படம் உருவாகியுள்ளது. மாநாடு திரைப்படமும் தீபாவளிக்குத் தான் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், அஜித்தின் வலிமை திரைப்படத்தையும் அதே தீபாவளி வெளியீடாக ரிலீஸ் செய்தால் அனைத்து படங்களின் வசூலிலும் பிரச்சினை ஏற்படலாம் எனப் படக்குழு கருதுகிறதாம். அதனால், வலிமை படத்தை டிசம்பர் வெளியீடாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கொரோனாவால் தமிழ் சினிமா நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில் அனைத்து பெரிய படங்களையும் ஒரே நேரத்தில் களமிறக்க வேண்டாமென தமிழ் திரையுலகினர் கருதுவதாக கூறப்படுகிறது.
போனி கபூர் தயாரிப்பில் ஏற்கெனவே அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார். பிங்க் இந்தித் திரைப்படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை அஜித்துக்கு முற்றிலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஹெச்.வினோத் இயக்கிய இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நேர்கொண்ட பார்வை நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், போனி கபூர் அஜித்தை வைத்து மற்றொரு படத்தை இயக்குவதாக அறிவித்தார். வலிமையில் ஹெச்.வினோத் இயக்குநராக இணைந்தது கூடுதல் வலிமையாகப் பார்க்கப்படுகிறது.
அஜித் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனால் அஜித் ரசிகர்கள் அதை தல தீபாவாளி என்று கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அவர்களுக்கு தல தீபாவளி இல்லை போல. இது குறித்த அதிகாரப்பூர்வமாக படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
அதேபோல் இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய்க்கும் படம் ஏதும் வெளியாகவில்லை. பீஸ்ட் திரைப்படம் வெளியீட்டுத் தேதி பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லை. தீபாவளி களத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த Vs வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடும் தான் இருக்கப் போகின்ற என கூறுகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)