Ajith Kumar biking tour : துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டை விசிட் செய்த விக்னேஷ் சிவன்... அடுத்த பைக் ரைடுக்கு ப்ளான் போடும் அஜித்!
துணிவு திரைப்படத்தில் மிகவும் மும்மரமாக இருக்கும் அஜித் அடுத்து விக்னேஷ் சிவனின் AK 62 படத்தின் படப்பிடிப்பு முடித்தவுடன் உலகளவில் பைக்கிங் டூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
திரை ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது பொங்கல் ரிலீஸ் திரைப்படங்கள். நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் இருவரும் நேரடியாக மோத உள்ள இந்த பொங்கல் ரிலீஸ் திரைப்படங்களை மிகவும் பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
மீண்டும் பைக்கிங் பயணம் தொடங்கும் :
இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் 'துணிவு' படத்தில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் அஜித். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் AK 62 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் 6 முதல் 9 மாதங்கள் பிரேக் எடுக்க உள்ளார். அந்த சமயத்தில் தனது பைக்கிங் சுற்று பயணத்தை உலக நாடுகளில் மேற்கொள்ள உள்ளார் எனக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
#Thunivu - #AK62 Director Vignesh shivan visited #ChillaChilla sets today..🔥 Song Shoot will be over by tomorrow..⭐#Ajithkumar | #HVinoth | #Ghibran
— Laxmi Kanth (@iammoviebuff007) November 24, 2022
தொடங்கியது சில்லா சில்லா ஷூட்டிங்:
துணிவு படத்திற்காக சென்னையில் கோகுலம் ஸ்டுடியோஸில் பிரமாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் சில்லா சில்லா பாடல் படப்பிடிப்பு நடைபெற்றது எனக் கூறப்படுகிறது. அஜித் குமார் இடம்பெறும் இந்த பாடலின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இன்றைக்குள் பாடலின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சில்லா சில்லா பாடல் செட்டிற்கு சென்று பார்வையிட்டதாக கூறப்படுகிறது. அஜித் குமார் துணிவு படத்தின் டப்பிங் பணிகளை முழுவதுமாக முடித்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Met AK sir after long time ❤️ yet another meeting with sir, to cherish for life 🙏👍 Thank you for all the positive words and wishes sir ❤️❤️🤗🤗 pic.twitter.com/yVaYIc3Ca5
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 23, 2022
SK - AK மீட்டிங் :
நடிகர் சிவகார்த்திகேயன் - நடிகர் அஜித் சமீபத்தில் சந்தித்தனர். அவர்களின் சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் "நீண்ட நாட்களுக்கு பிறகு AK சாரை சந்தித்துள்ளேன். இது வாழ்நாள் முழுவதும் நான் போற்றுவேன். உங்களின் அனைத்து பாசிட்டிவ் வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி" என பதிவிட்டு இருந்தார்.