Ajith Kumar: விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து குட்டி ப்ரேக்: குழந்தைகளுடன் ஃபுட்பால் விளையாடி மகிழ்ந்த அஜித்!
முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து முன்னதாக படக்குழு சென்னை திரும்பியது.
நடிகர் அஜித் குமார் தன் மகன் உள்ளிட்ட குழந்தைகளுடன் ஃபுட் பால் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். த்ரிஷா கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க, அர்ஜூன், ஆரவ், ரெஜினா காஸண்ட்ரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து முன்னதாக படக்குழு சென்னை திரும்பியது.
இந்நிலையில், தன் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை முன்னிலைப்படுத்தும் அஜித், தன் மகன் ஃபுட்பால் பயிற்சி பெறும் இடத்தில் குழந்தைகளுடன் ஃபுட்பால் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தன் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் ஷட்டில் விளையாட்டின் மீதான ஆர்வம் தொடங்கி, அஜித் தொடர்ந்து தன் குடும்பத்தினரின் விளையாட்டு ஆர்வத்தை பாராட்டி ஊக்குவித்து வருகிறார். இந்நிலையில், ஃபுட் பால் மீதான தன் மகன் ஆத்விக்கின் ஆர்வம் காரணமாக அவரையும் சிறு வயது முதலே ஊக்கப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் விடாமுயற்சி ஷூட்டிங் முடித்த இடைவெளியில் தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வரும் அஜித், தற்போது தன் மகன் பயிற்சி பெறும் இடத்தில் குழந்தைகளுடன் உற்சாகமாக ஃபுட்பால் விளையாடி மகிழும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.
அதேபோல் விடாமுயற்சி படப்பிடிப்புத் தளத்தில் நடிகை த்ரிஷாவுடன் அஜித் இணைந்திருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
@trishtrashers & #Thala #Ajith on the sets of #VidaaMuyarchi #Trisha #SouthQueenTrisha pic.twitter.com/8nwAmdQGRm
— Trisha Krishnan FC (@ActressTrisha) February 6, 2024
நடிகர் ஆரவ் கடந்த சில வாரங்களாக நடிகர் அஜித்தின் ஷூட்டிங் தள புகைப்படங்களைப் பகிர்ந்து அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.