முதல் திருமணம் முறிவால் படாத கஷ்டம் இல்ல; அஜித் குமாரின் தம்பி அனில் குமார் பேட்டி!
தன்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது மிகுந்த மன வேதனையை கொடுத்தது என்று நடிகர் அஜித் குமாரின் சகோதரர் அனில் குமார் ஓபனாக பேசியுள்ளார்.

2025 ஆம் ஆண்டு, அஜித் குமாருக்கு அதிஷ்டமான ஆண்டாகவே மாறியுள்ளார். அடுத்தடுத்து ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறார். சமீபத்தில் இருக்கு உலகில் மிக உயரிய விருதுகளில் ஒன்றான மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அதே போல் இந்த ஆண்டில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். பிப்ரவரி 6ஆம் தேதி அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான விடாமுயற்சி படமும் வெளியாக உள்ளது. மிகப்பெரிய எதிர்பாப்புக்கு மத்தியில் உருவாகும் இந்த படம் 500 கோடி வசூலை அள்ளுமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் அஜித் குமாரின் சகோதரர் அனில் குமார் அவருடைய திருமண முறிவு குறித்து ஓபனாக பேசியுள்ளார். தனியார் யூடியூட் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தான் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஐஐடி படிப்பு, வெளிநாட்டு வேலை என்று ஜாலியாக இருந்தேன். அதன் பிறகு இந்தியா வந்து ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை நடத்தினேன். எனக்கு எது பிடிக்கிறதோ அதை தான் நான் செய்வேன். என்னுடைய அண்ணன் அஜித்துகு பத்மபூஷன் விருது கிடைத்தது எங்களுடைய குடும்பத்திற்கே சந்தோஷம்.
என்னதான் வெளிநாட்டிற்கு சென்று கை நிறைய சம்பாதித்து சந்தோஷமாக வாழ்ந்தாலும் என்னுடைய முதல் திருமணம் பிரேக்கப்பில் முடிந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் உசுரா இருந்தோம். குழந்தைக்கு என்ன பேரு வைக்கலாம் என்பது குறித்து எல்லாம் பேசினோம். ஒருநாள் என்னை விட்டு சென்றுவிட்டால். அது எனக்கு ரொம்பவே கஷ்டத்தை கொடுத்தது. அந்த சூழலில் என்னுடைய கையில் துப்பாக்கி இருந்திருந்தால் நான் எனக்கு நானே சுட்டு கொண்டிருப்பேன். தற்கொலை உணர்வு வந்தது. ஆனால், அப்படி நான் செய்யவில்லை. அதன் பிறகு என்னுடைய வாழ்க்கை ரொம்பவே மாறியது.
என்னுடைய வாழ்க்கை மாறியது போன்று இளைஞர்களின் வாழ்க்கை மாறிவிடும். அப்படியிருக்கும் போது யாரேனும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வேன் என்று வந்து நின்றால் பளார்னு அவர்களை அறைய தான் இப்போது தோன்றுகிறது. இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று வாழ்க்கையை வாழும் போது தான் புரிய வரும். பிரச்சனைகள் வர தான் செய்யும். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அனுபவம் இருக்கும். அந்த அனுபவம் என்னுடைய திருமண முறிவுக்கு பிறது தான் எனக்கு கிடைத்தது என்று கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

