Thala 61 | அடுத்த வருஷம் முழுக்க ’தல’ பண்டிகைகள்.. அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட்...
வலிமை படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தல 61-இன் வெளியீட்டு தேதி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.வலிமை படத்தை ஹச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளர். இந்த படத்தின் மீதான ஹைப் பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய படம் என்றாலும் பல்வேறு காரணங்களால் படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட மாஸ் நடிகர் அஜித், ஆனால் அவர் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகவில்லை என்றதும். சமூக வலைத்தளத்தையே அதகளப்படுத்த தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். இந்த சூழலில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகி ட்விட்டரையே அதிர செய்தது. இந்த சூழலில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரும் படம் வருகிற பொங்கல் பண்டிகையை ( ஜனவரி, 2022) முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
இது ஒரு புறம் இருக்க அஜித் மீண்டும் ஹச்.வினோத் மற்றும் போனி கபூருடன் கூட்டணி அமைத்துள்ளார். தற்போது தல 61 என அழைக்கப்படும் படத்தின் பூஜை கூட இன்னும் தொடங்கவில்லை. ஆனால் படம் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.அடுத்த ஆண்டு பொங்கல் மற்றும் தீபாவளி அஜித் ரசிர்களுக்கு தல பொங்கல் மற்றும் தல தீபாவளியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. தல61 இல் அஜித் முழுக்க முழுக்க நெகட்டிவ் ஷேடில் நடிக்கவுள்ளாராம். ஹச்.வினோத் , அஜித்தின் 61 வது படத்திற்காக இரண்டு மூன்று கதைகளை அஜித்திடம் சொன்னாராம் அதில் அஜித் இந்த கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறியதால் அதையே படமாக்குவது என முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. முன்னதாக அஜித் நெகட்டிவ் ஷேடில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் ‘மங்காத்தா’. இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் மீம்ஸ்களை கலக்கிக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அஜித்தின் 61 வது திரைப்படத்தில் அப்படியான இரு கதாபாத்திரத்தை அஜித் ஏற்று நடித்தால் , அது அவருக்கு மட்டுமல்ல , அவரது ரசிகர்களுக்கும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. விரைவில் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
It looks like #ThalaAjith will have two releases in 2022 - #Valimai (Pongal) and #Thala61 (Diwali) both directed by H Vinoth and produced by @BoneyKapoor! pic.twitter.com/uGY8ySJRmC
— Rajasekar (@sekartweets) November 29, 2021
இது ஒரு புறம் இருக்க அஜித் தன்னிடம் கதை சொல்லிய தியாகராஜன் குமாரராஜாவிடம் மீண்டும் கதை விரிவாக்கத்தை மீண்டும் கேட்டிருக்கிறாராம்.அவரின் கதை அஜித்திற்கு பிடித்து போகவே பச்சை கொடி அசைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அஜித்தின் 62 வது படத்திற்கு தியாகராஜன் குமாரராஜாவோடு கூட்டணி அமைக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தியாகராஜன் குமாரராஜா முன்னதாக ஆரண்ய காண்டம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு சூப்பர் டியூலக்ஸ் திரைப்படத்தில் ஒரு பகுதியை இயக்கியிருந்தார்.தியாகராஜன் குமாரராஜாவுக்கு அஜித்துடன் இணைந்து வேலை செய்வது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் , திரைக்கதைக்கு உதவியாக இருந்துள்ளார் அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இன்னும் சில வாரங்களில் அஜித்தின் 61 வது படம் குறித்த அறிவிப்பையும் நாம் எதிர்பார்க்கலாம்