Aditi Rao : என்றும் உடனிருப்பேன்! சித்தார்த்துக்கு க்யூட்டாக பர்த்டே விஷ் சொன்ன அதிதி ராவ்!
Aditi Rao : வருங்கால கணவர் சித்தார்த் பிறந்தநாளுக்கு தன்னுடைய சோசியல் மீடியா மூலம் அழகான பதிவுடன் வாழ்த்துக்கள் சொன்ன நடிகை அதிதி ராவ்.
இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். முதல் படத்திலேயே அனைவரின் கவனமும் ஈர்த்த சித்தார்த் தந்து துள்ளலான நடிப்பால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான ஒரு நடிகரானார்.
அதிதி ராவ் அறிமுகம் :
மலையாளத்தில் வெளியான 'பிரஜாபதி' திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. 'காற்று வெளியிடை' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சித்தார்த் - அதிதி டேட்டிங் :
சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் ஒன்றாக இணைந்து 2021ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'மகா சமுத்திரம்' திரைப்படத்தில் நடித்திருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு டேட்டிங் வரை சென்றது. எந்த ஒரு பொது நிகழ்ச்சியாக இருந்தாலும், ஈவென்ட்டாக இருந்தாலும் சேர்ந்தே காணப்பட்டனர். ஒருவரையொருவர் டேக் செய்து சோசியல் மீடியாவில் போட்டோ போஸ்ட்களை பகிர்ந்து வந்தனர். இருப்பினும் அவர்கள் இருவர் இடையே இருக்கும் உறவு குறித்த வெளிப்படையாக காதலை தெரிவிக்காமல் இருந்தனர்.
சித்தார்த் - அதிதி நிச்சயம் :
இந்நிலையில் சித்தார்த்தும் அதிதி ராவும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம், ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் கடந்த மார்ச் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் ஒன்று சோசியல் மேடையில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் இருவரும் நிச்சயதார்த்த மோதிரங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவருக்கும் நிச்சயம் முடிந்த தகவலை தெரிவித்தனர். விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
அதிதி வாழ்த்து :
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த்துக்கு தன்னுடைய இன்ஸ்டா பக்கம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அதிதி ராவ். "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
எல்லையில்லா சிரிப்பு, தேவதையின் துகள்கள், என்றும் புன்னகை தொடர, உங்களுக்கு என்றும் அதிக சக்தி கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள். நான் என்றும் உங்களை ஊக்குவிக்க உடன் இருப்பேன்" என பகிர்ந்து இருந்தார்.
அதிதி ராவ் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.