Adipurush trolls: ஆதிபுருஷ் படத்தை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்... காரணம் என்ன?
வெளியான நாள் முதல் கேலிகளை சந்தித்து வரும் ஆதி புருஷ்.. என்னதான் ஆச்சு நம்ம பாகுபலி பிரபாஸுக்கு?
பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படம் பல்வேறு மொழிகளில் பான் இந்திய படமாக, அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியானது. படத்தின் க்ராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் குழந்தைகள் பார்க்கும் பொம்மை படத்தை போல் இருப்பதால் மக்கள் இப்படத்தை ட்ரால் செய்து வருகின்றனர்.
After watching Adhipurush teaser..
— 𝐀𝐑𝐔𝐍 𝐕𝐉🦋 (@ARUN_VIJAY_01) October 2, 2022
Thalapathy fans reaction to #Varisu vs #Adhipurush on Pongal be like : pic.twitter.com/s1OutOqsNG
ஒரு பக்கம் ஓம் ரவுத்தின் இயக்கத்தை பற்றி கேலி செய்து வருகின்றனர். மற்றொரு பக்கம், பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு படத்திற்கு போட்டியாக ஆதிபுருஷ் படம் போட்டியாக அமையும் என்ற கருத்து நிலவிய நிலையில், விஜய் ரசிகர்கள் இப்படத்தின் டீசரை பார்த்து விட்டு இந்த பொங்கல் எங்க பொங்கல் இந்த பொங்கல்
வாரிசு பொங்கல் என சந்தோஷ கடலில் தத்தளித்து கொண்டு இருக்கின்றனர். பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாக பெரிய அடி விழாது என்ற எண்ணமும் அவர்கள் இடையில் நிலவி வருகிறது.
பாகுபலி ஒன்றாம் பாகம், இரண்டாம் பாகம் என உலகளவு அசத்திய பான் இந்திய ஹீரோ பிரபாஸுக்கு இந்த நிலமையா என்று எண்ணும் போது சற்று வருத்தமாகதான் உள்ளது. பொன்னியின் செல்வன் டீசர் வெளியான போதும் இப்படிதான் மக்கள் அனைவரும் ட்ரால் செய்தனர். ஆனால், இப்போது அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். அதனால், படத்தின் க்ராபிக்ஸ் காட்சிகள் பார்க்க சகிக்கவில்லை என்றாலும் முழு படம் பார்க்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.
Dear #Prabhas fans don't feel about #Adipurush teaser trolls, here we also have one cartoon film. You repay that all trolls when it release. pic.twitter.com/4hUHkZr3cJ
— மாரி (@MaariBala_Offl) October 2, 2022
அதுபோல், அமைதியாக இருந்த சூர்யா 42 படத்தையும் ஆதிபுருஷ் உடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். அந்த ட்வீட்டில் “ சூர்யா 42 போஸ்டரை ஷேர் செய்து பிரபாஸ் ரசிகர்களே கவலை வேண்டாம். கோலிவுட்டிலும் ஒரு பொம்மை படம் தயாராகி வருகிறது என்று கூறிப்பிட்டுள்ளனர். இதை மக்கள் ட்ரால் செய்தாலும், சிலர் வழக்கம் போல் பாய்காட் ஆதிபுருஷ் என்றும் புறக்கணித்து வருகின்றனர். படத்தில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகள் ஹிந்து மதத்தையும் ஹிந்து கடவுள்களையும் தவறாக சித்தரித்துள்ளது அதனால் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் சில மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : ‛என் படுக்கையில் கூட அழுது இருக்கிறேன்...’ சோக கதையை பகிர்ந்து கொண்ட ராஷ்மிகா!
Ayalaan Movie: இந்தியாவிலேயே முதன்முறை... அயலான் எப்படியான படம்.. ஈஷா கோபிகர் ஷேரிங்ஸ்!