கவுண்டமணி கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்.. வடிவேலு இப்படித்தான்.. ஒய்.விஜயா சொன்ன சுவாரஸ்யம்
கவுண்டமணிகிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்.. எல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான்... பகீர் பேட்டி அளித்த ஒய். விஜயா
70ஸ், 80ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஒய். விஜயா. கதாநாயகியாக, வில்லியாக, நகைச்சுவை நடிகையாக மற்றும் ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்பட வாய்ப்பு :
சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் முதல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். 1974ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'வாணி ராணி' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரமாக அறிமுகமானார். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஒய். விஜயாவுக்கு சிறு வயது முதலே டான்சராக வேண்டும் என்ற ஆசை. சினிமாவில் வாய்ப்பு கேட்டு சென்னைக்கு வந்தவருக்கு 'வாணி ராணி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. தெலுங்கில் ஒய். விஜயா ஹீரோயினாக நடித்த ஏராளமான படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன.
சின்னத்திரை என்ட்ரி :
கமலுடன் ஒய். விஜயா இணைந்து ஆடிய 'சிங்காரி சரக்கு நல்ல சரக்கு' பாடல் இன்று வரை பிரபலமாக இருக்கும் சூப்பர்ஹிட் பாடல். தெலுங்கில் மிகவும் பிஸியாக இருந்த காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கியது. ஒய். விஜயா கடைசியாக ஜோதிகாவின் அம்மாவாக 'பிரியமான தோழி' படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகி சின்னத்திரை பக்கம் என்ட்ரி கொடுத்த ஒய். விஜயா மின்னலே, கல்கி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
கவுண்டமணி - வடிவேலு :
சமீபத்தில் நடிகை ஒய். விஜயா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தார். கவுண்டமணி உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளேன். அவர் ஒரு லெஜெண்ட். ஆனால் அவருடன் நடிக்கும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கேப் கிடைச்சா கலாய்ச்சுவிடுவார்.
அதே போல ராஜகாளி அம்மன் படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நடிக்கும்போது அவர் என்னுடைய கால் விரல்களை நீட்டி விடுவார்.
கண்டிஷன் போடமாட்டோம்:
அந்த காலகட்டத்தில் தனி அறை எல்லாம் கிடையாது. அனைவரும் ஒரே அறையில் தான் தூங்குவோம், மரத்தடியில் அமர்ந்து ஒன்றாக உட்கார்ந்து தான் சாப்பிடுவோம், சீன் எல்லாம் ஒரே இடத்தில் இருந்து தான் கேட்போம். கண்டிஷன் எல்லாம் போட்டதே கிடையாது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கேட்டு நடிப்போமே தவிர இது எப்படி அது எப்படி என்று எல்லாம் கேள்விகள் கேட்க மாட்டோம்.
காஸ்டிங் கோச் :
இன்றைய ஹீரோயின்கள் காஸ்டிங் கோச் பிரச்சனைகளை எல்லாம் கிளப்புவது வெறும் பப்ளிசிட்டிக்காக தான் என நினைக்க தோன்றுகிறது என தன்னுடைய திரைப்பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் நடிகை ஒய். விஜயா.