''பாத்திரம் கழுவினால் ரெண்டு இட்லி தருவாங்க'' .. வாழ்க்கையின் சோக பக்கங்களை பகிர்ந்த நடிகை வாசுகி!
முதல்வர் மு.க ஸ்டாலினையும் , உதயநிதி ஸ்டாலினையும் பா.ஜ.க மேடையில் இழிவான முறையில் விமர்சனம் செய்திருந்தார்.
நடிகை வாசுகி :
தமிழ் சினிமாவில் உச்ச காமெடி நட்சத்திரங்களாக இருந்த கவுண்டமணி , செந்தில் காம்போவில் ஒரு சில படங்களில் தலைக்காட்டியவர் நடிகை வாசுகி. எம்.ஜி.ஆரின் ரசிகரான இவரது தந்தை ஆறுமாத குழந்தையாக இருந்த வாசுகியை கையில் கொடுத்து பெயர் வைக்க சொன்னாராம். எம்.ஜி.ஆரும் திருவள்ளுவரின் மனைவி வாசுகியின் நினைவாக அந்த பெயரை வைத்தாக கூறும் வாசுகிதான் சமீபத்தில் டாக் ஆஃப் தி டவுன். சமீபத்தில் பாஜகவில் இணைந்த அவர் , முதல்வர் மு.க ஸ்டாலினையும் , உதயநிதி ஸ்டாலினையும் பா.ஜ.க மேடையில் இழிவான முறையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அவரை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சிக்க துவங்கினர்.
வாசுகியின் பரிதாப நிலை :
ஆனால் இந்த பேச்சுக்கு பின்னால் வாசுகியின் பரிதாப நிலை இருக்கிறது. சினிமாவில் அவ்வபோது தலைக்காட்டி வந்தவருக்கு , சில காலங்களுக்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் 2001 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து கழக பேச்சாளர் என்ற அந்தஸ்தை பெற்றார். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து சாப்பிட்டு வந்திருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு வாசுகி கழக பேச்சாளர் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார்.
பாத்திரம் கழுவி சாப்பிடவும் தயார் :
நான் திருமணம் ஆகாதவள் எனக்கு குழந்தைகளும் இல்லை. அதிமுக எனக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் நான் பாஜகவில் இணைய சென்றேன் அங்கும் என்னை சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் என்னை மேடையில் பேச அழைத்தார்கள். எனக்கு இருந்த மன அழுத்தத்தில்தான் நான் முதல்வரை அப்படியெல்லாம் பேசிவிட்டேன் . எனக்கு 10 ஆயிரம் பணம் கிடைத்தது. அதற்காகத்தான் பேசினேன் என்றார்.இப்படியாக தனது நிலையை விளக்கியவர் ஏதாவது ஒரு ஜவுளி கடையில் வேலை கிடைத்தால் கூட நான் செய்ய தயார் . உறவினர்கள் யாரும் உதவவில்லை. இருந்தாலும் எங்காவது ஒரு கடையில் பாத்திரம் கழுவினால் இரண்டு இட்லி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இன்னும் காலத்தை ஓட்டுகிறேன் என்றார்.