Trisha Political Entry: ‛எப்படி கிளம்புச்சின்னே தெரியல..’ அரசியல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா!
த்ரிஷா அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
த்ரிஷா அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ அந்தத்தகவல் உணமைக்கு புறம்பானது. இப்படியான ஒரு தகவல் எப்படி பரவியது என்றே தெரியவில்லை. எனக்கு அரசியலில் சேரும் எண்ணம் இல்லை” என்று பேசியிருக்கிறார்.
நன்றி: விகடன்
1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து கோலிவுட்டில் தலை காட்டிய த்ரிஷா, 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அவர் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தது லேசா லேசா படம் தான். தொடர்ந்து ரஜினி,கமல், விஜய்,அஜித், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி வரை அவர் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நடிகையாகவே உள்ளார்.
View this post on Instagram
தொடர்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா, அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனி கதாநாயகியாகவும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். 39 வயதாகும் த்ரிஷா இதுவரை திருமணம் செய்யாத நிலையில், அவரின் திருமண செய்திக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
அரசியலில் குதிக்கிறாரா
இதற்கிடையில் நடிகை த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் ஒன்று இணையதளங்களில் தீயாக பரவியது. இது அவரது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் திரையுலகினரிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்து த்ரிஷா தரப்பில் எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் பலரும் குழப்பமடைந்தனர். ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து, அப்படியான எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆனால் வந்தால் வரவேற்போம் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சொல்லி இருந்தார்.
அம்மா விளக்கம்
இதனிடையே இதுதொடர்பாக த்ரிஷா அம்மா உமா கிருஷ்ணன் பேசினார். அந்தப் பேட்டியில், “ அப்படி எல்லாம் இல்லை.அந்த தகவல் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இப்படி ஒரு தகவல் எங்கிருந்து வருகிறது என எனக்கும் சொல்லுங்கள் என அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்திருந்தார்.