மேலும் அறிய

Mari Selvaraj: பெரியாரை திட்டினால் பெரிய சிந்தனையாளரா? - விளாசிய மாரி செல்வராஜ்

1990ம் ஆண்டு காலக்கட்டங்களில் அம்பேத்கர் இயல்பாகவே வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தார். அதேசமயம் பெரியார் எனக்கு தொலைதூர குரலாகவே இருந்தார் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பெரியாரை திட்டுவதாலேயே ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆக முடியாது என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 

சென்னையில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் விருது வழங்கும் விழாவில் பெரியார் விருது நடப்பாண்டு இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை அவர் எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “ இந்த விருதை பெறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். என்னை மாதிரி கிராமத்தில் இருந்து சாதிய இறுக்கம் நிறைந்த ஊரில் இருந்து சினிமா, எழுத்தை நோக்கி பயணிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவை எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்துக்கள். அதுதான் என்னுடைய சினிமாக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

1990ம் ஆண்டு காலக்கட்டங்களில் தென் தமிழ்நாடான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பற்றியெரிந்த காலத்தில் வளர்ந்த பையன் நான். எங்கள் வீட்டில் என்னுடைய சித்தப்பா கம்யூனிச சித்தாந்தத்தை கொண்டிருந்தார். அப்போது எனக்கு அம்பேத்கர், பெரியார் ஆகியோர் பரீட்சையமான முகங்கள். அம்பேத்கர் இயல்பாகவே வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தார். அதேசமயம் பெரியார் எனக்கு தொலைதூர குரலாகவே இருந்தார். 

சட்டக் கல்லூரியில் படிக்கும்போது பெரியாரை தெரிந்துக் கொள்ளும் சூழல் அமையவில்லை. ஆனால் எனக்குள் பெரியாரை கொண்டு சேர்த்தது என்னுடைய மனைவி தான். நான் இப்போது பெரியாரை பற்றி படித்து விட்டு ஏதாவது பேசுகிறேன் என வைத்துக் கொண்டால், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து மிகச்சிறப்பாக பேசுவேன். பெரியாரை எதிர்த்தே நான் பிரபலமாக முடியும். 

நன்றாக பேச கத்துக்க முடியும். மிகப்பெரிய தெம்பு வந்து விடும். என்னுடைய பேச்சுக்கு பாராட்டு கிடைத்து விடும். அந்த தெம்பும், திராணியும் என்ன செய்யும் என கேட்டால், நாம் யாரிடம் இருந்து கற்றுக் கொண்டோமோ, அவர்களைப் பற்றி பேசும்போது தான் நாம் பெரிய ஆளாக முடியும். ஆசானை மீற வேண்டும் என்பது, அவர்களை குறை சொல்ல வேண்டும் என்பதல்ல. ஆசான் உங்களைப் பாராட்ட வேண்டும். 

பெரியாரை திட்டுவதாலேயே ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆகி விட முடியாது. அவரை புரிந்து கொண்டு அவர் எந்த மாதிரியாக சமூகம், கருத்து சுதந்திரத்தை விதைக்க ஆசைப்பட்டாரோ அதை செய்ய வேண்டும். நாம் எதை மக்களிடம் கொடுக்கிறோம் என்பது முக்கியம். வன்மம், பிரிவினை, வெறுப்புணர்வை கொடுப்பது சாதனை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாரி செல்வராஜ் பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கையெழுத்து போடுவாளா ரேவதி? தடுத்துவிடுவதற்காக பாய்ந்து செல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கையெழுத்து போடுவாளா ரேவதி? தடுத்துவிடுவதற்காக பாய்ந்து செல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Mandaadi Review: மண்டாடி..! வெற்றிக்கோட்டை தாண்டினாரா சூரி? படகுபோட்டி ரசிகர்களை கவர்ந்ததா? விமர்சனம் இதோ
மண்டாடி..! வெற்றிக்கோட்டை தாண்டினாரா சூரி? படகுபோட்டி ரசிகர்களை கவர்ந்ததா? விமர்சனம் இதோ
Sardar 2 Review: உளவாளி கார்த்தி சர்தார்-2வை காப்பாற்றினாரா? SJ சூர்யா மிரட்டினாரா? விமர்சனம் இதோ..!
உளவாளி கார்த்தி சர்தார்-2வை காப்பாற்றினாரா? SJ சூர்யா மிரட்டினாரா? விமர்சனம் இதோ..!
'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!
'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
V S Babu Hospital report :கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
TVK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்த விஜய்.. அனல் பறக்கும் மோதல்!
TVK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்த விஜய்.. அனல் பறக்கும் மோதல்!
வசதியோ.. வசதி..! அறிமுகமாகியது புதிய Creta, Alcazar & Creta EV Lounge Editions கார் - எவ்ளோ விலை?
வசதியோ.. வசதி..! அறிமுகமாகியது புதிய Creta, Alcazar & Creta EV Lounge Editions கார் - எவ்ளோ விலை?
”தற்குறி, பொறுக்கி, மக்கள் காரி துப்புவார்கள்”.! விஜய்யை தர லோக்கலாக இறங்கி அடித்த திமுக.!
”தற்குறி, பொறுக்கி, மக்கள் காரி துப்புவார்கள்”.! விஜய்யை தர லோக்கலாக இறங்கி அடித்த திமுக.!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள்: ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எப்போது? அன்புமணி கேள்வி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள்: ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எப்போது? அன்புமணி கேள்வி
Zelensky: மயிரிழையில் உயிர் தப்பிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.! ட்ரோனுடன் மோத இருந்த விமானம்.! நடந்தது என்ன.?
மயிரிழையில் உயிர் தப்பிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.! ட்ரோனுடன் மோத இருந்த விமானம்.! நடந்தது என்ன.?
Sardar 2 Review: உளவாளி கார்த்தி சர்தார்-2வை காப்பாற்றினாரா? SJ சூர்யா மிரட்டினாரா? விமர்சனம் இதோ..!
உளவாளி கார்த்தி சர்தார்-2வை காப்பாற்றினாரா? SJ சூர்யா மிரட்டினாரா? விமர்சனம் இதோ..!
Maruti Baleno: 5 வேரியண்ட்களில் பலேனோ - ஹேட்ச்பேக்கின் முழு விலைப்பட்டியலை வெளியிட்ட மாருதி சுசூகி
5 வேரியண்ட்களில் பலேனோ - ஹேட்ச்பேக்கின் முழு விலைப்பட்டியலை வெளியிட்ட மாருதி சுசூகி
Embed widget