ஸ்ரீப்ரியா மகள் சினேகாவுக்குத் திருமணம்.. ’வாவ்’ மாப்பிள்ளை இவர்தான்..
நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது.

நடிகை ஸ்ரீப்ரியா 80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் ரஜினியுடன் பில்லா, கமல்ஹாசனுடன் சலங்கை ஒலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் 70,80-களில் முன்னணி கதாநாயகர்களுடன் இவர் நடித்த படம் கோலிவுட்டில் பெரும் ஹிட்டடித்தன.
That’s a glorious 48 years! 48/62 #62YearsOfKamalism pic.twitter.com/QymUjkr9ek
— sripriya (@sripriya) August 11, 2021
இவர் நித்யா மேனன் நடிப்பில் மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தையும் இயக்கியுள்ளார். நடிப்பு, இயக்கம் என்று மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் ஸ்ரீப்ரியா இருக்கிறார். கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் ஸ்ரீப்ரியா இருக்கிறார்.
இவர் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, நாகர்ஜுன் என்ற மகனும், சினேகா என்ற மகளும் இருக்கின்றனர்.
சினேகா லண்டனில் உள்ள கல்லூரியில் சட்டம் பயின்றார், மேலும், லண்டனிலேயே தனது முதுகலை மற்றும் சட்டப் பயிற்சி படிப்பையும் படித்திருக்கிறார்.
இவர் அன்மோல் சர்மா என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களது திருமணம் ஏப்ரல் 4,5,6 ஆகிய தினங்களில் பல நடைமுறைகளுக்கு பிறகு சென்னையில் நடக்கவிருக்கிறது. மேலும், விசா நடைமுறைக்கு உதவும் வகையில், திருமணம் லண்டனில் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Keerthi Suresh | நாயை கொடுமைப்படுத்தினாரா கீர்த்தி சுரேஷ்? சர்ச்சையை கிளப்பும் இன்ஸ்டா போட்டோ!
எம்பிஏ படித்திருக்கும் அன்மோல் சர்மா, லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்தில் பணிபுரிகிறார். இவரது குடும்பம் கடந்த 25 ஆண்டுகளாக இங்கிலாந்தில் தொழிலதிபர்களாக உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ”உங்களுக்கு தெரியாத விஷயத்தை சொல்றேன்.. ஸ்கூல் படிக்கும்போது..” மணிமேகலை சொன்ன சீக்ரெட்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

