Manimegalai Hussain | ”உங்களுக்கு தெரியாத விஷயத்தை சொல்றேன்.. ஸ்கூல் படிக்கும்போது..” மணிமேகலை சொன்ன சீக்ரெட்..
விஜே மணிமேகலையின் பள்ளி பருவ புகைப்படம் வைரலாகியுள்ளது.
![Manimegalai Hussain | ”உங்களுக்கு தெரியாத விஷயத்தை சொல்றேன்.. ஸ்கூல் படிக்கும்போது..” மணிமேகலை சொன்ன சீக்ரெட்.. VJ Manimegalai childhood photo goes viral in instagram Manimegalai Hussain | ”உங்களுக்கு தெரியாத விஷயத்தை சொல்றேன்.. ஸ்கூல் படிக்கும்போது..” மணிமேகலை சொன்ன சீக்ரெட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/f396c103b4d3f426ff58d9fe77931550_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானவர் மணிமேகலை. விஜேவாக அறிமுகமாகி பிரபலமானவர் மணிமேகலை. தனது தொகுத்து வழங்கும் பாணியால் தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளார். 2019ஆம் ஆண்டு சன் டிவியிலிருந்து மாறி விஜய் டிவிக்கு சென்றார் மணிமேகலை. அந்தச் சேனல் நடத்தும் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர், தொகுப்பாளராக மாறினார்.
அந்தவகையில், மணிமேகலையின் சின்னத்திரை வாழ்க்கையில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’.ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த ஷோவில் கோமாளியாக தோன்றி காமெடியில் கலக்கியிருந்தார்.
View this post on Instagram
இதற்கிடையே, மணிமேகலை கடந்த 2017ஆம் ஆண்டு உதவி நடன இயக்குனரான ஹுசைனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மணிமேகலையும், ஹுசைனும் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.
மணிமேகலை தனது காதல் கணவர் ஹுசைனுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதும் வழக்கம்.
இந்தச் சூழலில், மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பள்ளி பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் கோமாளி மணிமேகலையா இப்படி என கூறி அப்புகைப்படத்தை பகிர்ந்துவருகின்றனர். அதில் தான் பள்ளியில் லீடர் எனவும் எப்போதும் என் கையில் மைக் கண்டிப்பாக இருக்கும் எனவும் சீக்ரெட் சொல்லியுள்ளார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)