மேலும் அறிய

Sneha : அப்படி இருந்திருக்கலாம்னு வருத்தப்பட்டேன்.. சினேகா சொன்ன ஷாக் தகவல்கள்..

”உலகத்தின் எந்த மூலைக்கு போனாலும் நான் பெருமையா சொல்லுவேன்."

சினிமா பல மாறுதல்களை கண்டது  20’s இல் தான். அந்த சமயத்தில் வெஸ்டன் , ஹோம்லி என மாறுப்பட்ட  கதைகளில் கச்சிதமாக பொருந்தியவர் நடிகை சிநேகா. பப்ளியான முகம் , அழகான சிரிப்பு என ரசிகர்களை கவர்ந்த சிநேகாவை புன்னகை இளவரசி என கொண்டாடியது கோலிவுட்.  நதியா, ஜோதிகா போலவே சிநேகாவும் தான் நடிக்க வந்த காலக்கட்டத்தில் இளம் பெண்களின் ட்ரெண்ட் செட்டராகவே இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக வட இந்திய நடிகைகள் ஆக்கிரமித்த கோலிவுட்டை சினேகா கச்சிதமாகவே கையாண்டார். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பான நேர்காணல் ஒன்றில் , தான் தமிழ் பெண்ணாக சந்தித்த சவால்களை பகிர்ந்திருக்கிறார் சினேகா

View this post on Instagram
 
A post shared by Sneha (@realactress_sneha)

அதில் “எல்லா விஷயங்களையும் நான் வெளிப்படையாக பேசிடுவேன். என்னை பிடிக்காதவங்க  நிறைய பேர் இருக்காங்க. நான் எல்லோருக்கும் பிடித்த மாதிரியாக இருக்கனும்னா பொய் சொல்லிதான் ஆகனும் வேற வழியில்லை.என்னுடைய நட்பு வட்டாரத்தில் யாருமே புறம்பேசமாட்டாங்க. மற்றவர்களை பற்றி பேசாமல் இருந்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம். சீரியல்ஸ் பார்க்கமா இருந்தாலும் டென்சன்ஸ் குறையும். தமிழ் பேச தெரியுறது சினிமாவுல முக்கியம் இல்லை.

நீங்க நடிக்குறதுதான் முக்கியம். எந்த மொழி திரைப்படங்களாக இருந்தாலும் நடிக்கலாம். அது எல்லாத்தையும் தாண்டி நான் தமிழ் பெண்ணு சொல்லுறதுக்கு ரொம்ப பெருமைப்படுகிறேன். உலகத்தின் எந்த மூலைக்கு போனாலும் நான் பெருமையா சொல்லுவேன். சிலர் நீங்க தமிழா ? சவுத் இந்தியாவா ? என முகத்தை சுளித்துக்கொண்டு கேட்பார்கள் . ஆனால் நான் சத்தமா தமிழச்சினு பெருமையா சொல்லுவேன். சில விஷயங்களை வெளிப்படையாக  பேச முடியாது. தமிழ் பெண்ணா இருக்கதுல சில பிள்ஸ்ஸும் இருக்கு மைனஸும் இருக்கு. சில நேரங்கள்ல நாம வட இந்தியாவுல இருந்து வந்திருக்கலாமோனு ஒரு சின்ன வருத்தம் இருக்கு “ என தெரிவித்திருக்கிறார் சினேகா.

View this post on Instagram
 
A post shared by Sneha (@realactress_sneha)

சினேகா , நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டு தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்கள், ரியாலிட்டி ஷோ என தலைக்காட்டி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget