ஒரே சேட்டைதான்.. ஆனால் க்யூட்! மகள் ராதாவுடன் ஆட்டம்போடும் நடிகை ஸ்ரேயா!!
நடிகை ஸ்ரேயா தனது குழந்தையுடன் குதூகலித்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது
நடிகை ஸ்ரேயா தனது குழந்தையுடன் குதுகலித்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே பொதுவாக எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். இதற்கு திரை பிரபலங்களும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டில் நடிகர் விஜயின் ஜாலி ரெய்டு என்றால், பாலிவுட்டில் நடிகை ஸ்ரேயாவின் குதுகல புகைப்படங்கள்.
ஸ்ரேயா, நீச்சல் உடையில் தனது குழந்தையுடன் தனது நேரத்தை செலவிடும் புகைப்படங்கள் நேற்று இணையம் முழுவதும் ஆக்கிரமித்தது. குழந்தையை கையில் ஏந்தியவாறு புன்னகைக்கும் தருணங்களை அவர் புகைப்படங்களாக மாற்றியுள்ளார்.
View this post on Instagram
புல் தரையில் பிங்க் உடையுடன் குழந்தை ராதா மெள்ள நடந்து செல்வது, தாயின் உடையை பற்றி மேலே ஏறி வர முயற்சிப்பது, என பல அற்புதமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இனிமையான ஆசிர்வதிக்கப்பட்ட தருணங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையுடன் மட்டுமல்லாது கணவர் ஆண்ட்ரே கோஸ்கிவ் உடனும் அவர் சேர்ந்து பொழுதுகளை கழித்த நினைவுகளை புகைப்படங்களாக தொகுத்துள்ளார். இதற்கு முன்னும் கூட அவர் தனது குழந்தையுடன் இருந்த பொழுதுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே இந்த படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
நீச்சல் உடையில் ஸ்ரேயா தனது குழந்தையுடன் நீச்சல் குளம் அருகில் இருந்து எடுத்த படம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. இந்த படத்திற்கு அவர், பிரபல மேற்கத்திய பாடகர் டொன்னா லிவிஸினுடைய 'i love you always forever' என்கிற வரியை தலைப்பிட்டுள்ளார்.
மற்றொரு வீடியோவில் தனது குழந்தை ராதாவை கையில் ஏந்தியபடி ஒரு ஆங்கில பாடலை பாடியுள்ளார். பின்னணியில் கிட்டார் இசை கருவி இசைக்கப்படுகிறது. இந்த வீடியோவுக்கு அவர் அற்புதமான ராதா என பெயரிட்டுள்ளார்.
ஸ்ரேயா கடந்த 2018ல் ஆண்ட்ரே கோஸ்கிவை திருமணம் செய்துகொண்டார். 2020ல் இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்