Actress Sangeetha:'காதல் திருமணம் தான்..ஆனால் 2 ஆண்டுகள் நரக வாழ்க்கை' - நடிகை சங்கீதா அதிர்ச்சி தகவல்!
பாடகர் க்ரிஷை திருமணம் செய்த முதல் 2 ஆண்டுகள் வாழ்க்கை நரகமாக இருந்ததாக அவரது மனைவியும், நடிகையுமான சங்கீதா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாடகர் க்ரிஷை திருமணம் செய்த முதல் 2 ஆண்டுகள் வாழ்க்கை நரகமாக இருந்ததாக அவரது மனைவியும், நடிகையுமான சங்கீதா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
க்ரிஷ் காதல் மனைவி சங்கீதா:
1990களின் பிற்பகுதியில் ரசிகா என்ற பெயரில் மலையாள திரையுலகிலும், தீப்தி என்ற பெயரில் கன்னட திரையுலகிலும் நடிகையாக அறிமுகமானவர் சங்கீதா. இவர் உயிர், பிதாமகன், தனம், எவனோ ஒருவன், தம்பிக்கோட்டை, காளை, மன்மதன் அம்பு, வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல பின்னணி பாடகர் க்ரிஷை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இப்படியான நிலையில் தன்னுடைய காதல் குறித்தும், திருமணம் குறித்தும் சங்கீதா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், “கல்யாணம் அன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நான் க்ரிஷை ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் சந்தித்தேன். அந்த விழாவில் அவருக்கு நான் விருது வழங்கினேன். எனக்கு க்ரிஷை பார்த்ததும் பிடித்திருந்தது. அவர் பேசிய விதம் என்னை கவர்ந்தது. நான் முதலில் என் காதலை தெரிவித்தேன்.
பிரச்சினை:
பழகி பார்த்து பிடித்திருந்தால் கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்டேன். அவரும் சரி என சொன்னார். நாங்கள் 3 மாதங்கள் டேட்டிங் செய்தோம். 4வது மாதம் எங்களுக்குள்ளேயே மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்துக் கொண்டோம். 8வது மாதத்தில் எங்கள் திருமணம் நடைபெற்றது. அதே விருது வழங்கும் நிகழ்ச்சி அடுத்தாண்டு நடந்தது. அங்கு நாங்கள் தம்பதியினராக சென்றோம்.
எனக்கு க்ரிஷை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. இரண்டு பேர் வீட்டிலேயும் பிரச்சினை சென்று கொண்டிருந்தது. கடைசி நிமிடம் வரை திருமணம் நடக்குமா, இல்லையா என்ற எண்ணம் தான் இருந்தது. நிறுத்தி விடலாமா என பேசிக் கொண்டிருந்தோம். கடைசியாக தாலி கட்டும் போது தான் நிம்மதியாக இருந்தது.
நரக வாழ்க்கை:
முதல் 2 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நரகமாகவே இருந்தது. காரணம் எங்கள் இருவருக்குமே ஒருவரை பற்றி ஒருவருக்கு பெரிதாக தெரியாது. இந்த காலக்கட்டத்தில் யாரையும் எங்கள் வாழ்க்கைக்குள் வர விடாமல் புரிந்து கொண்டோம். எல்லோரும் பிரபலங்கள் திருமணம் செய்துக் கொண்டால் ஜாலியாக இருப்பார்கள் என நினைக்கிறார்கள். ஒரு உறைக்குள் 2 கத்தி இருப்பது போல தான் ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் பிரபலமாக இருப்பதும். அங்கு நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா போன்ற பிரச்சினை அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் எங்களுக்குள் மிகவும் ஸ்ட்ராங்கான புரிதல் இருக்கு.
க்ரிஷ் கடவுளுக்கும் மிகவும் பயப்படுவார். யார் கடவுளுக்கு ரொம்ப பயப்படுவாங்களோ, அவங்க உண்மைக்கும் பயப்படுவாங்க. நம்மளை சரி பண்ணிப்போம். கடவுளே இல்லைன்னு சொல்றவங்களை சரி பண்ணிக்கவே முடியாது. நானும் மிகவும் பக்தி எண்ணம் கொண்டவள். அதனால் எனக்கு க்ரிஷை மிகவும் பிடித்திருந்தது. 100 முறை எங்களுக்குள் பிரச்சினை வந்த வந்தபோது தப்பான முடிவு எடுத்து விட்டோமோ என நினைத்துள்ளேன். ஆனால் எந்த விஷயம் என்றாலும் என்னை நான் திருத்திக்கிறேன் சொல்வாரு. அப்படி சொல்றவங்க கூட வாழ்க்கையை வாழ்ந்து விடலாம்” என அதில் சங்கீதா தெரிவித்துள்ளார்.