மேலும் அறிய

Sadha: “அந்தப் படத்தில் நடித்ததால் வீட்டிற்கு சென்று அழுதேன்” - ஜெயம் படம் பற்றி ஷாக் கொடுத்த சதா..!

ஜெயம் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அந்நியன் படம் மூலம் மிகப்பெரும் புகழ்பெற்று தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் இருப்பவர் நடிகை சதா.

Sada speach: தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் பிரபலமான சதா தனக்கு ஏற்பட்ட கசமான அனுபவங்கள்  குறித்து பகிர்ந்துள்ளார். அந்த காட்சியில் ஏன் நடித்தேன் என நினைத்து இதுவரை வருந்துவதாக சதா கூறியுள்ளார். 

சதா:

தெலுங்கில் வெளிவந்த அதிபுதிரி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை இயக்குநர் தேஜா இயக்கி இருந்தார். அதிபுதிரி படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. ஜெயம் என பெயரிடப்பட்ட படத்தை இயக்குநர் மோகன் எடுத்த போது, அதில் ஹீரோவாக அவரது தம்பி ரவி அறிமுகமானார். இதேபோன்று தமிழ் சினிமாவில் முதல் முறையாக சதா அறிமுகமானார். ஜெயம் படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றதால் ரவியின் பெயர், ஜெயம் ரவி என சினிமா வட்டாரத்தில் அறிமுகமானது. 

ஜெயம் படத்தில் ஹோம்லி லுக்கில் வந்து கலக்கிய சதா அனைவருக்கும் பிடித்த ஹீரோயினாக மாறினார். ஜெயம் படத்தின் வரவேற்பால் சதாவுக்கு அஜித்துடன் இணைந்து திருப்பதி, மாதவனுடன் பிரியசகி, விக்ரமின் அந்நியன் படங்களளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என நடித்து கொண்டிருந்த போது சதாவுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன. தமிழில் அவர் கடைசியாக டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ரியாலிட்டு ஷோக்களில் பங்கேற்று வருகிறார். 

கண்ணீர் விட்டு அழுத சதா:

இந்த நிலையில் அண்மையில் படப்பிடிப்பின் நிகழ்வுகள் குறித்து சதா பேசி இருந்தார். அதில், தமிழில் தனது முதல் படமான ஜெயம் படத்தின் ஷீட்டிங் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் அவரது நாக்கால் சதாவின் கண்ணத்தை தீண்டுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என பலமுறை இயக்குநரிடம் சொன்னதாகவும், ஒருக்கட்டத்தில் கெஞ்சி கூட கேட்டதாகவும், ஆனால் படத்தில் அந்த காட்சி இடம்பெற வேண்டும் என கூறி அதை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சீனில் நடித்து முடித்த பிறகு வீட்டிற்கு சென்று அழுததாகவும் சதா பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: Iraivan: இதயம் பலகீனமானவங்க ஜாக்கிரதை.. ஜெயம் ரவியின் இறைவன் படத்துக்கு ஏ சான்றிதழ்.. இதுதான் காரணம்!

Sai Pallavi: ‘கேவலமான நோக்கம்’.. திருமண வதந்தி பரப்பியவர்களை வெளுத்து வாங்கிய சாய் பல்லவி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?
IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?
Manipur Issue: கேள்விக்கு சம்மந்தமே இல்லாத பதில்..! பிரதமர் மோடி.. மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதலமைச்சர்
Manipur Issue: கேள்விக்கு சம்மந்தமே இல்லாத பதில்..! பிரதமர் மோடி.. மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதலமைச்சர்
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
IND vs AUS: இந்தியாவுக்கு இப்படி ஒரு பெருமையா? 142 வருஷ சிட்னி மைதான வரலாறு இதுதான்!
IND vs AUS: இந்தியாவுக்கு இப்படி ஒரு பெருமையா? 142 வருஷ சிட்னி மைதான வரலாறு இதுதான்!
Embed widget