மேலும் அறிய

HBD Rohini Molleti: 5 வயதில் முளைத்த காதல்; 53 வயதிலும் தொடரும் சினிமா பயணம்..பிரபல நடிகை ரோகிணி பிறந்தநாள் இன்று!

'இருவர்','ராவணன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயிற்கும்,'பாம்பே' திரைப்படத்தில் மனிஷா கொய்ராலாவிற்கும் 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவிற்கும்,பிண்ணனி குரல் கொடுத்திருக்கிறார் ரோகிணி

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி நடிகையாக ,பாடலாசிரியராக,டப்பிங் கலைஞராக இயக்குனராக தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் பயணித்து வெற்றிக் கண்டவர்,ரோகிணி என்கிற இந்திரா ராணி.

சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி தளங்களிலும்,அரசியலிலும் காலூன்றினார்,ரோகிணி.  அவரது 53 வது பிறந்த நாள் இன்று. ஆந்திராவில் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்திருக்கிறார். இவரின் தந்தைக்கு ஒரு நடிகராக வேண்டும் என்பது ஆசையாம். அவரால், அது முடியாமல் போனதால், தனது மகளான ரோகிணியை நடிக்க ஊக்குவித்திருக்கிறார். 

                                                       HBD Rohini Molleti: 5 வயதில் முளைத்த காதல்; 53 வயதிலும் தொடரும் சினிமா பயணம்..பிரபல நடிகை ரோகிணி பிறந்தநாள் இன்று!

சினிமா மீது கொண்ட தீரா தாகத்தால் தனது 5 வது வயதில் 'யசோதா கிருஷ்ணா' எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரோகிணி தேனாண்டாள் ஃபிலிம்ஸ்' ராம நாரயணன் இயக்கத்தில் உருவான 'சுமை' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

90 களின் சினிமாவில் முக்கியமான வில்லனாக கருதப்பட்ட நடிகர் ரகுவரனுக்கும் ரோகிணிக்கும் 1996 ஆம் ஆண்டு திருமணமானது. அதன் பின்பு 2004 ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்தானது. நாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் இவர் பெரிதும் கவனம் ஈர்த்தார். 

குறிப்பாக,'விருமாண்டி' திரைப்படத்தில் இவர் நடித்திருந்த 'ஏஞ்சல்லா காட்டமுத்து' என்கிற கதாபாத்திரம் கதைகருவில் முக்கியமான ஒன்று. இவர் சமீபத்தில் 'சோனி லைவ்' ஓ.டி.டி தளத்தில் வெளிவந்து சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் 'விட்னெஸ்' படத்தில் நடித்திருக்கிறார். அது மட்டுமின்றி பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் மூலம் நம் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

                                              HBD Rohini Molleti: 5 வயதில் முளைத்த காதல்; 53 வயதிலும் தொடரும் சினிமா பயணம்..பிரபல நடிகை ரோகிணி பிறந்தநாள் இன்று!

அதன் பின்பு ,டப்பிங் கலைஞராக பெரிதும் அடையாளப்படுத்தபட்டவர் இவர். மணி ரத்னத்தின் 'இருவர்','ராவணன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயிற்கும்,'பாம்பே' திரைப்படத்தில் மனிஷா கொய்ராலாவிற்கும் 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவிற்கும்,ராம் கோபால் வர்மாவின் 'சிவா' திரைப்படத்தில் அமலாவிற்கும் பிண்ணனி குரல் கொடுத்திருக்கிறார். 

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் 'பாம்பே ஜெயஸ்ரீ','மது ஸ்ரீ' குரலில் வெளிவந்த 'உனக்குள் நானே' பாடலை எழுதி பாடலாசிரியராகவும் அடையாளப் படுத்தப்பட்டார். 'மாலை பொழுதின் மயக்கத்திலே' திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இவ்வளவு ஏன் தனுஷ் நடிப்பில் வெளியான 'கலாட்டா கல்யாணம்' திரைப்படத்தில் கூட ஒரு பாடலை எழுதினார்.

இவர் ' அப்பாவின் மீசை' என்கிற திரைப்படத்தை இயக்கினார்,அத்திரைப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. சினிமாவில் மட்டுமின்றி தொலைகாட்சி தளங்களிலும் எழுத்தாளராக, தொகுப்பாளராக அறியப்பட்டார். டி.வி சீரியல்களில் எழுத்தாளராக பெரிதும் வலம் வந்தார்.தொலைகாட்சி லைவ் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் தடம் பதித்தார்.

                                                       HBD Rohini Molleti: 5 வயதில் முளைத்த காதல்; 53 வயதிலும் தொடரும் சினிமா பயணம்..பிரபல நடிகை ரோகிணி பிறந்தநாள் இன்று!

இவர் சமூக செயற்பாட்டளராகவும் அடையாளப்படுத்தப்பட்டார். சமூக செயல்களிலும் கலை வழியாக விழிப்புணர்வை கொடுக்க முயன்றிருக்கிறார். எய்ட்ஸ் விழிப்புணர்விற்காக குறும்படங்களை இயக்கினார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரங்களில் ஈடுபட்டார்.இவர் சமூக மாற்றத்திற்கான களத்தை தனது கலைத்திறன் மூலம் அமைப்பதால் பெரிதும் பாராட்டப்படுகிறார். இவர் தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
Embed widget