மேலும் அறிய

ஒரு பெண்ணுக்கு பிரச்னையே இன்னொரு பெண் தான்.. பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்!

ஒரு விஷயத்தால் பெண்ணுக்கு மனக்காயம் ஏற்படுகிறது. எதிரில் இருக்கும் ஆண் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடுகிறான். எளிதாக வேறொரு பெண்ணுடன் தன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான் என ரிது சௌத்ரி கூறியுள்ளார்.

தெலுங்கில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரிது சௌத்ரி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவு கடும் புயலை கிளப்பியுள்ளது. 

கடந்த 2025 செப்டம்பர்  7ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக ரிது சௌத்ரி கலந்து கொண்டார். சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் பரீட்சையமான அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் புகழ் சேர்த்தது. தப்பு தப்பாக கணித கேள்விகளுக்கு விடையளித்தது, டெமான் பவனுடனான காதல் கதை என மிகப்பெரிய அளவில் வைரலானார். இந்த நிலையில் சில தினங்கள் முன்பு அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். 

அதில், “இந்த சமூகம் பெண்களின் குணத்தை எளிதாக மதிப்பிடுகிறது. யாரும் ஒரு பெண்ணுக்கு கடந்த காலத்தில் என்ன நடந்தது என்று கேட்பதில்லை. அவளுடைய அன்பு, அக்கறை மற்றும் நேர்மை பற்றி யாரும் தெரிந்து கொள்ள விரும்ப மாட்டேங்குகிறார்கள். ஆனால் இறுதியில் ஏமாற்றப்படுவது ஒரு தாய் தான். உறவு முறிவுகள் மற்றும் மன அழுத்தத்தின் போதும் சரி,  அவள் தனது குடும்பம் மற்றும் தொழில் வாழ்க்கைக்காக அனைவர் முன்னிலையிலும் அவமானப்படும்போதும் சரி இது நிகழ்கிறது.

ஆனால் இந்த சமூகம் அவளுடைய வலியையும் வேதனையையும் கொஞ்சம் கூட பார்ப்பதில்லை. எல்லோரும் வதந்திகளையும் குற்றச்சாட்டுகளையும் மட்டுமே பார்க்கிறார்கள். உண்மை என்னவென்று அறியாமல் பெண்ணின் குணத்தை தீர்மானிக்கிறார்கள்.அவள் நிரபராதி என்றால், ஏன் அமைதியாக இருக்கிறாள் என்று கேட்கிறார்கள். 

ஒரு விஷயத்தால் பெண்ணுக்கு மனக்காயம் எளிதாக ஏற்படுகிறது. எதிரில் இருக்கும் ஆண் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடுகிறார். அவன் எளிதாக வேறொரு பெண்ணுடன் தன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்தப் பெண் அப்படி அல்ல. அவளுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் அதனை எதிர்கொண்டு மௌனமாக இருக்கிறாள். 

சில சமயங்களில் நட்பு ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக எதிராக மாறிவிடுகிறது. ஒரு பெண் பணத்திற்காகவும் மலிவான கவனத்திற்காகவும் மற்றொரு பெண்ணின் மீது குற்றம் சாட்டுகிறாள். அவள் சமூகத்தின் முன் தன்னை ஒரு முட்டாளாக்கிக் கொள்கிறாள். ஒரு பெண் மற்றொரு பெண்ணை அழித்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்திருந்தாலும் அந்தப் பெண் மௌனமாக இருக்கிறாள். அது அவளுடைய பலவீனம் அல்ல. இவையெல்லாம் தன் கர்மவினை என்று அவள் நம்புகிறாள். அவளைப் பற்றிய உண்மையை அறியாத இந்தச் சமூகம் அவளைத் தீர்ப்பளித்தாலும், அவள் அந்த வலியை மௌனமாகத் தாங்கிக்கொள்கிறாள் கூறியிருந்தார். 

பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற தலைப்பின் கீழ் ரிது சௌத்ரி இந்த பதிவை வெளியிட்டிருந்தார். இது உண்மையில் அவர் வாழ்க்கையில் நடந்ததா அல்லது வேறு எதுவும் விஷயமா என தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget