Ramya Pandian Marriage: கல்யாணம் எப்போது என்ற ரசிகர்.. மழுப்பாமல் பதிலளித்த ரம்யா பாண்டியன்..!
ரம்யா பாண்டியன் தனது திருமணம் குறித்து வாய் திறந்து பேசியுள்ளார்.
ரம்யா பாண்டியன் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அண்மையில் இன்ஸ்டாகிராம் லைவிற்கு வந்த ரம்யா பாண்டியனிடம் “எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்ட போது , “திருமணம் செய்து கொள்ள முதலில் ஒருவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். அவருக்கும் என்னை பிடிக்க வேண்டும். இன்னும் அப்படி ஒருவரை நான் கண்டுபிடிக்கவில்லை. எனவே, இப்போது திருமணத்துக்கு வாய்ப்பு இல்லை’ என்று பதிலளித்தார்.
View this post on Instagram
தமிழில் ‘டம்மி டப்பாசு’ படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத்தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’படத்தில் நடித்தார். இந்தப் படம் இவருக்கு நல்லப்பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து மொட்டை மாடியில் இவர் எடுத்த கவர்ச்சிப்படங்கள் இவரை பிரபலமாக்கியது. அதனைத்தொடர்ந்து பிக்பாஸில் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சீசனில் கலந்து கொண்ட அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். அத்துடன் சமீபத்தில் நடந்துமுடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர் 3-ம் இடம் பிடித்தார்.
View this post on Instagram
தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.