Rakul Preet Singh: திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாதா? - நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆதங்கம்
திருமணத்துக்கு முன் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்த ரகுல் ப்ரீத் சிங், திருமணத்திற்கு பின்பும் அதனைத் தொடர்ந்து வருகிறார்.

சினிமாவில் நடிகைகளின் பயணத்தில் திருமணம் என்பது தடைக்கல் அல்ல என நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான தமிழின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் ரீமேக்கான கில்லி படம் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து தமிழில் தடையறத் தாக்க படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதன் பின்னர் என்னமோ ஏதோ, புத்தகம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே, பூ, அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்தார்.
தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கிய நடிகையாக உள்ள ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தமிழில் இந்தியன் 3 படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதேசமயம் இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி திரைப்பட நடிகர், தயாரிப்பாளரான ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
If we could name this outfit like a movie title… what would you call it? 🎬🖤 pic.twitter.com/lgYuo0gl2N
— Rakul Singh (@Rakulpreet) November 25, 2025
அதேசமயம் திருமணத்துக்கு முன் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்த ரகுல் ப்ரீத் சிங், திருமணத்திற்கு பின்பும் அதனைத் தொடர்ந்து வருகிறார். ஆனால் இது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது. இப்படியான நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் “திருமணம் முடிந்த பிறகும் கூட தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறீர்களே?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை கவர்ச்சி காட்டுவது என்பது அவரவர் விருப்பமாகும். அந்த எல்லைகளை திருமணம் தடுக்கவோ, குறைக்கவோ முடியாது. மேலும் நடிகைகளின் பயணத்தில் திருமணம் என்பது தடைக்கல் அல்ல. அவை ஒரு ஊக்கம் தரும் ஏணிப்படிகள். மேலும் பொதுவாகவே திருமணத்திற்கு பிறகு நடிகைகள் அவ்வளவு தான் என்ற எண்ணம் பலருடம் உள்ளது. அது மிகவும் தவறான கண்ணோட்டமாகும். என்னுடைய விஷயத்தில் அப்படி நடப்பதில்லை என உங்களுக்கு தோன்றலாம். காரணம் என் உள்ளுணர்வுகளை என்னுடைய உறவுகள் புரிந்து கொள்கிறார்கள்” என ரகுல் ப்ரீத் சிங் வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அவரின் இந்த பதில் பாராட்டைப் பெற்றுள்ளது.





















