Mrunal Thakur : சீதாராமம் கொடுத்த வெற்றி.. ராஷ்மிகாவை பின்னுக்கு தள்ளிய மிருணாள் தாகூர்? திரையுலகம் அதிர்ச்சி..!
சீதா ராமம் படத்தின் வெற்றியால் நடிகை மிருணாள் தாகூரின் சம்பளம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீதா ராமம் படத்தின் வெற்றியால் நடிகை மிருணாள் தாகூரின் சம்பளம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரியல் டூ சினிமா நடிகை
தொலைக்காட்சி சீரியல்களில் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி 'சீதாராமம்’ என்ற ஒற்றைப் படத்தின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் நடிகை மிருணாள் தாக்கூர்.எந்தவித பின்புலமும் இன்றி பாலிவுட்டில் சீரியல் உலகில் முதலில் காலடி எடுத்து வைத்த மிருணாள், வாரிசு நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் கடின உழைப்பால் வளர்ந்த நடிகைகளுள் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார்.
2012இல் ‘முஜ்சே குச் கெஹ்தியே காமோஷியான்’ எனும் சீரியலில் மூலம் அறிமுகமான மிருணாள், தொடர்ந்து 2014ஆம் ஆண்டு பாலிவுட்டில் லவ் சோனியா படத்தில் நடித்து பெரிதும கவனமீர்த்தார்.அதன் பின் சூப்பர் 30, டூஃபான் படங்களில் பாலிவுட்டில் நடித்த மிருணாள், டோலிவுட்டில் சீதாராமம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா உலகில் கால் பதித்தார்.
சீதாவாகக் கலக்கிய மிருணாள்
நடிகர் துல்கர் சல்மான், நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து இந்தப் படத்தில் மிருணாள் நடித்திருந்த நிலையில், சீதாராமம் படம் மிருணாளை பெரும் புகழ் வெளிச்சத்துக்கு இட்டுச் சென்றது. இளவரசி நூர்ஜஹான் எனப்படும் சீதா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை மிருணாள் க்ளாசிக் லுக்கில் வந்து தெலுங்கு தாண்டி பான் இந்தியா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக ஈர்த்திருந்தார். மிருணாள் அடுத்ததாக நானி 30 படத்தில் நடிகர் நானியுடன் கமிட் ஆகியுள்ளார்.
எகிறிய சம்பளம்!
இந்நிலையில், மிருணாள் சீதாராமம் படத்தில் வாங்கியதை விட மூன்று மடங்கு அதிகமான சம்பளத்துக்கு இந்தப் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டோலிவுட்டில் டாப் ஸ்டார்களுள் ஒருவராக வலம் வரும் நடிகை ராஷ்மிகாவுக்கு சீதாராமம் படத்தில் 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் மிருணாளுக்கு 2 கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நானி 30 படத்துக்காக மிருணாளுக்கு 6 கோடிகள் சம்பளமாக வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நடிகர் அக்ஷய் குமாரின் செல்ஃபி படத்தில் நடனமாடியதற்காக மிருணாளுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் மிருணாளின் சம்பளம் இப்படி ஒரே படத்தில் தடாலடியாக உயர்ந்துள்ளது டோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதேசமயம் மராத்தி நடிகையான மிருணாள் தாக்கூர் சமூக வலைத்தளங்களில் தனது க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபகாலமாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:PS2 Press meet : ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? 1000 கோடி இலக்கு நிறைவேறுமா? ஸ்வாரஸ்யமான கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம்