Actress Meena: திடீரென வீட்டுக்கு சென்ற மீனா... அதிர்ச்சியில் உறைந்த கலா மாஸ்டர்.. என்ன நடந்தது?
மீனா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்
![Actress Meena: திடீரென வீட்டுக்கு சென்ற மீனா... அதிர்ச்சியில் உறைந்த கலா மாஸ்டர்.. என்ன நடந்தது? actress meena surprise visit to kala master house photos viral Actress Meena: திடீரென வீட்டுக்கு சென்ற மீனா... அதிர்ச்சியில் உறைந்த கலா மாஸ்டர்.. என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/1b1cb460be59cf87a1ef8a54a482f1221662187568988224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தனது வீட்டுக்கு திடீரென நடிகை மீனா வந்த புகைப்படங்களை நடன இயக்குநர் கலா மாஸ்டர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இதனிடையே கணவர் வித்யாசாகருக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரின் இறப்புக்கு பிறகு வெளியே தலைக்காட்டாமல் இருந்த நடிகை மீனாவை நடிகைகள் சங்கீதா, ரம்பா, சங்கவி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்று கடந்த மாதம் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
View this post on Instagram
இந்நிலையில் பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் நேற்று தனது தனது திருமண நாளை கொண்டாடினார். அப்போது நடிகை மீனா சர்ப்பிரைஸாக தனது வீட்டுக்கு வந்தார் என்றும், அவர் வரமாட்டார் என தான் நினைத்தேன் எனவும் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)