Watch Video | ''பிரேக்க பிடி... பூ பூக்குற மாதிரி காலை எடு'' - L போர்டு ஷிவாங்கிக்கு டீச்சரான மணிமேகலை!
குக் வித் கோமாளி பிரபலங்கள் மணிமேகலையும், ஷிவாங்கியும் கார் ஓட்டும் அலப்பறைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிமேகலையை நமக்கெல்லாம் சன் டிவி வாயிலாகத் தான் தெரியும். சன் மியூஸிக்கில் பிரபலமாக இருந்த தொகுப்பாளினி மணிமேகலை காதலரை கரம் பிடித்தார். தன்னுடைய காதலர் ஹுசைனை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துள்ளார் மணிமேகலை. அவர்களின் காதல் திருமணம் ஊடகங்களின் முக்கியச் செய்தியாகக்கூட இடம் பெற்றது.
ஆனால் திருமணத்திற்குப் பின்னர் அவர் விஜய் டிவிக்கு மாறினார். வந்தாரை வாழவைக்கும் விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிக்களில் மணிமேகலைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இவர் செய்த நகைச்சுவை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலமாக அனைவர் மனதையும் ஈர்த்தவர் ஷிவாங்கி . அனைவரும் தங்கள் வீடு செல்ல பிள்ளையாக அவரை கொண்டாடுகிறார்கள் . சூப்பர் சிங்கர் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனவர் ஷிவாங்கி, அந்த சீசனில் வெற்றிபெறாத நிலையில் மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 1-இல் அறிமுகமானார். சீசன் 1 வெற்றிக்கு பிறகு சீசன் 2 குக் வித் கோமாலியிலும் பங்கு கொண்டார் . சீசன் 2 எதிர் பார்த்ததை விட பெரிய ஹிட் ஆனது. மிகவும் கலகலப்பாக இந்த சீசன் நிறைவும் பெற்றது
View this post on Instagram
இந்நிலையில் ரசிகர்களுக்கு பிடித்தமான இருவருமே இணையத்தில் அடிக்கும் லூட்டி அவ்வப்போது வைரலாகும். அப்படி ஷிவாங்கிக்கு தன்னுடைய பிஎம்டபில்யூ காரை எப்படி ஓட்டுவது என மணிமேகலை சொல்லிக் கொடுக்கும் வீடியோவை அவரே தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ளார். எப்படி கியர் போடுவது. பிரேக்கை எப்படி பிடிப்பது என விளக்குகிறார்.குறிப்பாக பிரேக்கை பிடித்துவிட்டு ஒரு பூ பூக்கிற மாதிரி இயல்பாக காலை எடுக்க வேண்டும் என மணிமேகலை சொல்லும் சீனை ரசிகர்கள் ரசித்து பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
தொலைக்காட்சியில் தனது பணியைத் தாண்டியும் மணிமேகலை எப்போதுமே தனது ரசிகர்களை எங்கேஜ்டாக வைத்திருப்பார். அவரது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் ஃபோட்டோக்களை எப்போதும் பார்க்கலாம். அது போல் அவர் யூடியூப் சேனல் ஒன்றும் வைத்திருக்கிறார். ஹுசைன் மணிமேகலை என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிலும் தவறாமல் வீடியோ அப்டேட்ஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்