“என்னால போஸ்ட்தான் போட முடியுது; என் நாட்டுக்கு ஒன்னும் பண்ண முடியல“ - நடிகை லாஸ்லியா உருக்கம்!
"சாதாரண தினக்கூலியாக போறவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு நினைத்தாலே கஷ்டமாயிருக்கு"
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் பரீட்சியமானார் . அவர் தற்போது தமிழ் சினிமாக்களிலும் தலைக்காட்டி வருகிறார். லாஸ்லியா நடிப்பில் ஃபிரண்ட்ஷிப் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் தான் நடித்த அனுபவங்களையும் இலங்கையில் நடக்கும் பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் மனம் திறந்திருக்கிறார்.
View this post on Instagram
அதில் ”நான் இதற்கு முன்னதாக பண்ணின படங்கள் எல்லாமே மனப்பாடம் பண்ணிதான் பேசுவேன். ஆனால் யோகி பாபு சார்க்கிட்ட இருந்து இந்த படத்தின் மூலமா எப்படி உள்வாங்கி நடிக்கனும் என்பதை கற்றுக்கொண்டேன். கூகுள் குட்டப்பா படத்துல நான் நிறைய கற்றுக்கொண்டேன். தர்ஷனுடன் நான் நடித்தது ரொம்ப ஹாப்பியா இருந்தது. எனக்கு ரொம்ப வசதியாக இருந்தது. இலங்கையில இப்போ பொருளாதார பிரச்சனை இருக்கு. நான் இன்னும் ஊருக்கு போகல. ஆனால் என் அம்மா எல்லாம் அங்கேதான் இருக்காங்க. எனக்கு அப்பா கிடையாது. நான்தான் என் குடும்பத்தை ஓட்டுறேன். அதனால இங்கே இருந்து குடும்பத்தை பார்த்துக்குறேன். நான் சினிமாவுல இல்லாமல் வேறு ஏதாவது வேலை செய்துக்கொண்டிருந்தால் இப்போ இருக்க சூழல்ல நிச்சயம் என் குடும்பத்தை என்னால பார்த்துக்கொள்ள முடியாது.
View this post on Instagram
கஷ்டமாகத்தான் இருந்துருக்கும். அம்மா கூட அதைத்தான் சொல்லுறாங்க. என்னால அதை கணெக்ட் பண்ணிக்க முடியுது. சாதாரண திக்கூலியாக போறவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு நினைத்தாலே கஷ்டமாயிருக்கு. என்னால போஸ்ட் மூலமா ஷேர் பண்ணி வருத்தப்படத்தான் முடியும் . என்னால போய் உதவி செய்ய முடியாது. அந்த நிலையில நானும் இல்லை.நாங்க நிறைய பார்த்துட்டோம் . இதுல இருந்தும் மீண்டு வந்துடுவோம்னு நினைக்குறோம். “ என ஷேர் செய்திருக்கிறார் லாஸ்லியா.