Kushboo | அது தனிப்பட்ட விஷயம்...சமந்தா விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு!
சமந்தா விவாகரத்து குறித்து கருத்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்
பிரபல நட்சத்திர ஜோடிகளான சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் தங்களது விவாகரத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில் அதுகுறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு, எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம், அது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்தது.எப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம்.
— chaitanya akkineni (@chay_akkineni) October 2, 2021
மேலும் எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள ஆகியோர் இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை கடந்து செல்வதற்கான பிரைவசியை அனைவரும் வழங்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை குஷ்பு, சமந்தா நாக சைதன்யா ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல் விவாகரத்து தொடர்பாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தம்பதிக்கு இடையே என்ன நடக்கிறது, அவர்களின் தனிப்பட்ட விஷயம். அவர்கள் இருவரும் பிரிந்ததற்கான உண்மையான காரணம், அவர்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மனிதனாக நாம் என்ன செய்ய முடியும் என்றால், அவர்களின் தனியுரிமையை மதிக்கவும், இந்த சூழலை புரிந்துகொள்ள அவர்களுக்கு இடம் வழங்குவதும்தான். யூகித்து முடிவுகளுக்கு வருவதை நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 தொடர் முதலில் பல எதிர்ப்புகளைச் சந்தித்து, வெப்சீரிஸ் சரியான பிறகு பலத்த வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து தெலுங்கு ஊடகங்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இப்பட விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு , பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய விருக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவருக்கும் இடையில் கிட்டத்தட்ட 4 ,5 முறை பேச்சு வார்த்தை நடத்தியதாம் குடும்ப நல நீதிமன்றம். ஆனால் இருவரும் தங்கள் முடிவுகளில் தீர்க்கமாக இருப்பதாகவும் , பேச்சுவார்த்தையில் உடன்படவில்லை என்றும் தெலுங்கு மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டன.
What happens between a couple,is between them. Nobody knows the actual reason why they part ways, except the two of them. What we can do as human is to respect their privacy n give them space to understand the situation more. Stop assuming, speculating n coming to conclusions. 🙏
— KhushbuSundar (@khushsundar) October 2, 2021