Keerthy Suresh Dance: குத்து...குத்து...கீர்த்தி சுரேஷின் செம அரபிக்குத்து டான்ஸ் - வைரல் வீடியோ..!
தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை நடித்து வருகிறார்.
உலகப் புகழ் பெற்ற ‘அரபிக்குத்து’ பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனம் ஆடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
குறிப்பாக பிரபலங்கள் வெளியிடும் வீடியோக்கள் பெருமளவில் வரவேற்பை பெற்று கூடுதல் கவனம் பெறுகின்றன. அவர்கள் செய்யும் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதால் அது வேகமாக பரவி வைரலாகிறது.
அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் புதிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் அவர் தனது தோழியுடன் அரபிக்குத்து பாடலுக்கு செமயாக டான்ஸ் ஆடியுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ:
View this post on Instagram
தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை நடித்து வருகிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் கீர்த்தி சுரேஷ் தற்போது இணைந்து ஒரு திரைப்பட்டத்தில் நடித்து வருகிறார். ’சர்காரு வாரி பட்டா’ என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சமீபத்தில், இந்தப் படத்தில் இடம்பெற்ற கலாவதி பாடலுக்கு டான்ஸ்ட் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்