மேலும் அறிய

இளையராஜா மட்டுமல்ல; யாரும் கருவறைக்குள் நுழைய முடியாது - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேச்சு

இசைஞானி இளையராஜா நேற்று முன் தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றார்.

இளையராஜா ஒரு இசைக்கடவுள் எனவும் அவரை கோயிலுக்குள் அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது எனவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மேல்நிலைப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழக பாரதிய ஜனதா கட்சி உடைய மைய குழு இன்று கூட்டம் நடைபெற்றது .

மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த உறுப்பினர் சேர்க்கையில் பல லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இணைந்து உள்ளன. அகில இந்தியாவின் குழு அமைக்கப்பட்டிருக்கிறது மாநிலங்கள் அளவிலும் அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  2025 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மாபெரும் எழுச்சி தரக்கூடிய ஒரு ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல்களிலும் அதனை தொடர்ந்து வரக்கூடிய தேர்தல்ளிலும் பாரதிய ஜனதா கட்சி பெரிய முத்தரையை பதிக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.

 2012ஆம் ஆண்டு   வாஜ்பாய் பிறந்த நாளை கொண்டாடும் போது அன்று தமிழ்நாட்டில் ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு வைப்பு நிதியாக 25 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டது  அதுமட்டுமின்றி,   அவர்கள் கல்வி செலவு அடங்கும்  அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்  1108 பேருக்கு   வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

இதனிடையே நடிகை கஸ்தூரி பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இளையராஜா ஒரு இசைக்கடவுள். அவரை கோயிலுக்குள் அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. அர்த்த மண்டபத்துக்குள் போக வேண்டாம் என்றதும் இளையராஜா போகவில்லை. கோயில் கருவறைக்குள் இளையராஜா என்றில்லை; யாருமே நுழைய முடியாது. திமுகவை வீழ்த்த வேண்டுமானால் ஒருமித்த பெரிய கூட்டணி அமைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். 

முன்னதாக, இசைஞானி இளையராஜா நேற்று முன் தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றார்.  இளையராஜா கோவிலுக்குள் வருகை தந்து ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய கருவறைக்குள் நுழைந்தார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினார்கள். இதனால் சற்று யோசித்த இளையராஜா சாமி இருக்கும் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget