janhvi kapoor: 3 குழந்தைகள் பெத்துக்கணும்.. ஜான்வி கபூரூக்கு இப்படி ஒரு ஆசையா.. காரணம் இதுதானாம்!
நடிகை ஜான்வி கபூர் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டும் பாலிவுட்டையே கட்டி ஆண்டவர் நடிகை ஸ்ரீதேவி. 80களில் நடிகர்களுக்கு இணையான சம்பளம் பெற்ற ஒரே நடிகை இவர்தான் என்பதை யாராலும் மறக்க முடியாது. நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பரம் சுந்தரி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியாவதற்கு முன்பே மலையாள மொழியை அவமதிப்பது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. மலையாள நடிகை ஒருவர் நடிகை ஸ்ரீதேவி மகள் என்றால் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் அளித்த ஜான்வி கபூர் பரம் சுந்தரி படத்தில் எனது அப்பாவும் அம்மாவும் கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் நான் பேசுவது அப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்திருந்தார்.
இதனிடையே ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திருமணம் குறித்து பேசியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு பிறகு எல்லோருக்கும் குழந்தை என்பது முக்கியமானது. அதை மறுக்கவில்லை. ஆனால், எனக்கு மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு காரணம் எனக்கு 3 தான் லக்கி நம்பர். வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் ஒற்றுமை இருக்காது. எப்போது சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் 3 குழந்தைகள் இருக்கும் போது சண்டைகள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. ஒரு குழந்தையை வைத்து மற்ற இருவரை சமாதானப்படுத்தி விடலாம். 3 பேருக்குள் ஒருவர் நடுவராக இருந்து பிரச்னையை சமாளிக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிறருக்கும் உதவியாகவும் இருப்பார்கள். இந்த எண்ணம் எனக்கும் பல நாட்களாக இருக்கிறது. அதை இப்போது வெளிப்படையாக பேசியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.





















