மேலும் அறிய

வெளியாகிறது ஜனநாயகன் ! நாளை படத்தை பார்வையிடும் மறுதணிக்கை குழு

ஜனநாயகன் திரைபடத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்குழு நாளை படத்தை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்து பின் தணிக்கை பிரச்சனையால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி படதயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை வாபஸ் வாங்கியது. நாளை மார்ச் 17 ஆம் தேதி தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்குழு ஜனநாயகன் படத்தை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. 

விஜய் அரசியல் களம் காண்பதற்கு முன்பு அவரது கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். ஜனநாயகன் திரைப்படம் விஜயின் அரசியல் பயணத்திற்கு சாதகமான அபிப்பிராயத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் தான் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் ஆட்சேபனம் தெரிவித்தது. முன்னதாக படத்திற்கு தணிக்கை U/A சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்து பின் படத்தை மறுதணிக்கைக்கு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது .

படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் நீதிமன்றத்தின் உதவியை நாடியது. முதலில் தனி நீதிபதி அமர்வு பின் தலைமை நீதிபதிகள் அமர்வு என இந்த வழக்கு படத்தின் ரிலீஸ் தேதியை மேலும் தாமதப்படுத்தியது. இதனால் தங்களது மனுவை படக்குழு வாபஸ் பெற்றது. 

 நாளை படத்தை பார்வையிடும் மறுதணிக்கை குழு 

கடந்த மார்ச் 9 ஆம் தேதி ஜனநாயகன திரைப்படத்தை மறுதணிக்கை குழு பார்வையிட இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தணிக்கை குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாததால் மறுதணிக்கை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி நாளை ஜனநாயகன் திரைப்படத்தை தணிக்கை வாரியத்தின் மறுதணிக்கைக் குழு படத்தை பார்வையிட இருக்கின்றனர். 9 பேர் கொண்ட மறுதணிக்கை குழு படத்தை பார்வையிட்டு தங்களது பரிந்துரைகளை படக்குழுவிற்கு அளிக்கும். தணிக்கை குழு பரிந்துரை செய்த திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் ஒரு சில வாரங்களில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும்.

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளார்கள். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த ஆண்டு தேர்தலில் கனிசமான வாக்குகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்த கையோடு ஜனநாயகன் திரைப்படத்தை படம்  திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget