மேலும் அறிய

Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்

Iran Sejjil Missile: அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான போரில், டான்ஸிங் ஏவுகணை என்று அழைக்கப்படும் செஜ்ஜில் ஏவுகணையை முதல் முறையாக ஈரான் பயன்படுத்தியுள்ளது. அந்த ஏவுகணை குறித்து இப்போது பார்க்கலாம்.

இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்கா. இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதில், ஈரான் அவ்வப்போது தாங்கள் தயாரித்த புது ஆயுதங்களை களமிறக்கி, சர்வதேச அளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், டான்ஸிங் ஏவுகணை என்று அழைக்கப்படும் செஜ்ஜில் ஏவுகணையை முதல் முறையாக இந்த போரில் பயன்படுத்தி, இஸ்ரேலை சிதறடித்துள்ளது. இந்த ஏவுகணை என்ன செய்யும்.? பார்க்கலாம்.

செஜ்ஜில் ஏவுகணையை களமிறக்கிய ஈரான்

இஸ்ரேலுக்கு எதிரான போரில், நேற்று தங்களது ஆப்ரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4-ன் ஒரு பகுதியாக, 54-வது அலை தாக்குதலை நடத்தியது ஈரான் புரட்சிகர காவல்படையான IRGC. இந்த தாக்குதலில், 2 டன் எடையுள்ள போர்முனை பொருத்தப்பட்ட சூப்பர் கனரக கோர்ரம்ஷஹர் ஏவுகணைகள், கைபர்-ஷேகன்(கைபர் பஸ்ட்டர்), காதர், எமாத் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் அரசின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவைகளுடன், இந்த போர் தொடங்கியதில் இருந்து முதன் முறையாக, இஸ்ரேல் ஆட்சியின் வான்வழி நடவடிக்கைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் விதமாக, அதன் மேலாண்மை மற்றும் முடிவெடுக்கும் மையங்களின் மீது, மூலோபாய மற்றும் திட எரிபொளால் இயங்கும் ஏவுகணையான செஜ்ஜில் 2(Sejjil 2) ஏவுகணை ஏவப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இஸ்ரேலின் ராணுவ பாதுகாப்புத் தொழில்களில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய உள்கட்டமைப்புகள், இஸ்ரேலின் ராணுவப் படைகள் ஒன்றுகூடும் இடங்கள் இருக்கும் பிரதேசத்தின் மையப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை ஏவப்பட்ட வீடியோ இணையத்திலும் பரவி வருகிறது.

செஜ்ஜில் ஏவுகணை என்பது என்ன.?

இஸ்ரேலுக்கு எதிரான போரில் முதன் முறையாக இந்த  செஜ்ஜில் 2 ஏவுகணையை ஈரான் பயன்படுத்தியுள்ளது. ஈரானின் சொந்த தயாரிப்பான இந்த ஏவுகணைக்கு, டான்ஸிங் ஏவுகணை(Dancing Missile) என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது, எதிரி நாட்டின் பாதுகாப்பு ரேடார்களில் சிக்காமல், அவற்றை எளிதாக ஏமாற்றக் கூடியது என்பதால், இதற்கு டான்ஸிங் ஏவுகணை என்று பெயர். அதேபோல், இந்த ஏவுகணையில் திரவ எரிபொருளுக்கு பதிலாக, திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, இந்த ஏவுகணை மிகவும் வேகமாக பயணிக்கும். எதிரி நாட்டு ரேடார்களால் இதன் திசையை கணிக்க முடியாத அளவிற்கு இது வேகமானது.

இதற்கு, அஷோரா அல்லது அஷுரா என்றும் பெயர்கள் உள்ளன. இது சுமார் 2,000 முதல் 2,500 கிலோமீட்டர் தூரம் வரை, தோராயமாக 700 கிலோகிராம் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும் (MRBM). அதிக உயரத்தில் சென்று சூழ்ச்சிகளை செய்து, இஸ்ரேலின் இரும்பு டோம் போன்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றும் திறன் கொண்டதால், இதற்கு டான்ஸிங் ஏவுகணை என்ற செல்லப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின்(CSIS) தகவலின்படி, இந்த ஏவுகணை சுமார் 18 மீட்டர் நீளம், சுமார் 1.25 மீட்டர் விட்டம் மற்றும் ஏவுதல் எடை தோராயமாக 23,600 கிலோகிராம் ஆகும். செஜ்ஜில் அமைப்பின் பணிகள் 1990-களின் முற்பகுதியில் தொடங்கி, முதல் சோதனை 2008-ல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது இந்த ஏவுகணை சுமார் 800 கிலோமீட்டர் தூரம் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், 2009-ல் இரண்டாவது சோதனை அதன் வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளில் மேம்பாடுகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த சோதனைகளில் சுமார் 1,900 கிலோமீட்டர் வரையிலான வரம்பை இந்த ஏவுகணை காட்டியதாகக் கூறப்படுகிறது. ஈரான் இந்த அமைப்பின் பல வகைகளை உருவாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. அதில் செஜ்ஜில்-2-வும் அடங்கும், அதே நேரத்தில், செஜ்ஜில்-3 வகை ஏவுகணை உருவாக்கத்தில் இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைப்பு செய்திகள்

Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget