மேலும் அறிய

Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்

Stalin warns DMK leaders : தமிழ்நாட்டுல 234 தொகுதி இருக்கு இதில நம்ம தொகுதியில நடப்பது தலைவருக்கு தெரியவா போகுது என்ற நினைப்பில இருக்க வேண்டாம். இந்த ஸ்டாலினுக்கு இரண்டு கண்கள் மட்டுமில்ல... 234 தொகுதிகளிலும் கண்ணும் காதும் இருக்கு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெருங்கும் தேர்தல்- அலர்ட் செய்யும் திமுக

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வகையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. இதில் ஆளுங்கட்சியான திமுக, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முன்னிலை பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், ஏப்ரல் 23 க்கு இன்னமும் 39 நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் பணியில் நம் கழகம் தான் No 1 ஆக இருந்து வருகிறது. அரசியல் களத்தில் நமது கையே ஓங்கி இருக்கிறது. அதேபோல கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நினைத்தவர்களின் சதியை முறியடித்து, புதிய கட்சிகளை அரவணைத்து மிக பலமான கூட்டணியைக் கட்டியிருக்கிறோம்.

அறுவடை செய்யும் காலம் இது

 கூட்டணி வலிமை, நலத்திட்டங்கள், ஐந்தாண்டு சாதனைகள் உள்ளிட்டவைகளால் நாம் தான் வெல்வோம் என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் மட்டுமின்றி, எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம். கவனமாக இருக்க வேண்டும். உங்களது ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு அசைவும், பேச்சும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். கடந்த ஓராண்டு காலமாக உழைத்த உழைப்பை அறுவடை செய்யும் காலம் இது. இனி வரும் நாட்கள் ரிலே ஓட்டப்பந்தயத்தில் வெற்றிக் கோட்டை அடைவதற்கு ஓடுவது போலத்தான். நம்மில் ஒருவர் கூட சுணங்கிவிடக் கூடாது. இதுவரை போட்ட உழைப்பை விட இரண்டு மடங்கு உழைப்பை அளித்து, கழகத்தின் வெற்றியை அறுவடைசெய்ய வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவரின் தோளிலும் உள்ளது.

என் உத்தரவுக்கும் வழிகாட்டுதலுக்கும் கட்டுப்பட்டு களத்தில் ஓயாமல் உழைத்து வரும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும் மதிக்கிறேன், அத்தனை உழைப்பிற்கும் அதற்குண்டான பலன் அவரவரை வந்து சேரும். வெற்றியை நெருங்கி உள்ளோம் இந்த நேரத்தில் தான் நாம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். கழகம் வென்றது என்ற செய்தி நம் காதில் எட்டும் வரை களத்தில் நின்று உழைக்க வேண்டும். தேர்தலில் நாம் போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 200 தொகுதிகள் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்றுங்கள். 

உட்கட்சி பிரச்சனையில் ஈடுபட்டால் அவ்வளவு தான்

தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்சனையும் இருக்க கூடாது தனிப்பட்ட மனஸ்தாபங்கள் கழகத்தின் வெற்றியை பாதிப்பதை எப்போதும் அனுமதிக்கமுடியாது. யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ, பிரச்சனையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால் அவர் எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாய் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கிறேன். இதை ஒவ்வொரு நிர்வாகிக்கும் சொல்லிவிடுங்கள். தனிப்பட்ட நிர்வாகிகளைவிட எனக்கு கழகத்தின் நலன்தான் முக்கியம். தேர்தல் நடக்கும் காலகட்டத்திலேயே நடவடிக்கை பாயும் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டுல 234 தொகுதி இருக்கு இதில நம்ம தொகுதியில நடப்பது தலைவருக்கு தெரியவா போகுது என்ற நினைப்பில இருக்க வேண்டாம். இந்த ஸ்டாலினுக்கு இரண்டு கண்கள் மட்டுமில்ல... 234 தொகுதிகளிலும் கண்ணும் காதும் இருக்கு. அத்தனை தகவலும் எனக்கு தனிப்பட்ட முறையில வந்திடும். இப்பவும் வந்திட்டு தான் இருக்கு. உங்கள் பொறுப்பில் இருக்கும் அத்தனை  தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே நீங்கள் வென்றதற்கு சமம். அடுத்த முறை அமையவுள்ள நமது ஆட்சியில் சீனியாரிட்டி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்.

எந்த பதவியில் இருந்தாலும் பார்க்க மாட்டேன்

அமைச்சர் பதவி என்பது அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே என்பதை அழுத்தம் திருத்தமாக இப்பொழுதே மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கழகத்தின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று தான் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பவர்கள் அல்ல என்பதையும் மனதில் வைதுக்கொள்ளுங்கள்.  

வேட்பாளர் தேர்வு, யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். அவரை பிடித்தால் சீட் கிடைக்கும், இவரை பிடித்தால் சீட் கிடைக்கும் என நேரத்தையும் உழைப்பையும் யாரும் வீணாக்க வேண்டாம் “மக்களுக்கு பிடித்தவர்களுக்கு “ மட்டுமே இம்முறை சீட். வெற்றிவாய்ப்புள்ள உறுதியாய் வெற்றி பெறும் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட்.

எல்லோருடைய தகவலும் எனக்கு வருது

எனக்கு ஒரே பணி தான் அது அரசியல் பணி. 24 மணிநேரமும் அரசியல் அரசியல் அரசியல் அதுதான் என் வாழ்க்கை. உங்க அத்தனை பேரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அதேபோல கழகத்தின் அத்தனை நிர்வாகிகள் பற்றிய update ம் என் table க்கு வந்திட்டே  இருக்கும். போன மாசம் வரைக்கும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சி மூலம் கூட கழக நிர்வாகிகள் அத்தனை பேரையும் நேரில் சந்தித்திருக்கிறேன். ஆகவே எனக்கு யாரையும் அறிமுகப்படுத்த வேண்டியது இல்லை. அனைவருமே நான் அறிந்தவர்கள் தான். தான் மட்டுமின்றி பிறரையும் வெற்றி பெற வைத்து கழகத்தின் மாபெரும் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு தேர்தலுக்கு பிறகு தேடி வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

 

 

தலைப்பு செய்திகள்

இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget