Devayani Daughter Iniya: தேவயானி மகள் இனியாவுக்கு அடித்த ஜாக்பாட்! ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படம் குறித்து வெளியான தகவல்!
தேவயானி மகள் இனியா, கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மாற உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது .

தமிழ் சினிமாவில், 90 காலகட்டங்களில், தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர் தேவயானி. இவர் நடிப்பில் வெளியான காதல் கோட்டை, பிரண்ட்ஸ், சூரியவம்சம், நினைத்தேன் வந்தாய், புதுமை பித்தன், போன்ற பல படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டு வரும் திரைப்படங்களாக உள்ளன .
தன்னை வைத்து, விண்ணுக்கும் மண்ணுக்கும், நீ வருவாய் என, போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்த தேவயானி... பெற்றோர் சம்மதத்தை மீறி வீட்டை விட்டு வெளியேறி அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில வருடங்களுக்கு பின்னரே தேவயானியிடம் அவரின் பெற்றோர் பேச துவங்கினர். நடிகை தேவயானி - ராஜகுமாரன் தம்பதிகளுக்கு தற்போது இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை தேர்வு செய்து படித்து வருகின்றனர் .

இந்த ஆண்டு இனியா படிப்பை முடித்த நிலையில், பாடல் மீது உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்காக ஜீ தமிழில், ஒளிபரப்பாகி வரும் சரிகமப 'சீனியர் சீசன் 5' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார். அறிமுக நிகழ்ச்சியிலேயே 'பாரதி' படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு என்கிற பாடலை பாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை மட்டும் இன்றி, நடுவர்களையும் ஆச்சரியப்படுத்தினார். மென்மையான குரல் வளம் கொண்ட இனியா தொடர்ந்து தன்னுடைய திறமையை பாடல் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
தேவயானி நினைத்தால், தன்னுடைய மகளுக்கு நேரடியாகவே சிபாரிசு மூலம் வாய்ப்பு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் இதுபோல் ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது குறித்து கேட்டதற்கு, தன்னுடைய மகளாக இருந்தாலும் அவருக்கு தீமையால் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக மகளை எந்த போட்டியில் பங்குபெற வைத்ததாக கூறினார். தேவயானியின் இந்த முடிவு பலர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சரிகமப நிகழ்ச்சி மூலம் தன்னை ஒரு சிறந்த பாடகி என நிரூபித்து வரும் இனியா, சினிமாவிலும் ஹீரோயினாக மாறப் போகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது . அதாவது தெலுங்கில் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில், பிரியதர்ஷினி புலிக்கொண்டா, சாய் குமார், நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் 'கோர்ட்'. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் தமிழ் உரிமையை இயக்குனர் தியாகராஜன் வாங்கியுள்ளதாகவும், இதில் தேவயானியின் மகள் இனியா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அம்மாவை போல் நடிப்பில் இனியா ஜெயிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















