Actress Deepa: குழந்தைகளை இப்படி கொடுமைப்படுத்துறாங்க.. நடிகை தீபா சொன்ன அதிர்ச்சி சம்பவம்
டிவியில் எல்லாம் குழந்தைகள் டான்ஸ், பாடுவது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.
குழந்தைகள் ஒன்றும் குரங்கு பொம்மை அல்ல, அவர்களை துன்பப்படுத்த வேண்டாம் என நடிகை தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தீபா மெட்டி ஒலி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் படத்தின் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்த அவருக்கு திருப்புமுனையாக கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’படம் அமைந்தது. தொடர்ந்து டாக்டர் தொடங்கி நம்ம வீட்டு பிள்ளை, சில்லு கருப்பட்டி, வீட்ல விசேஷம், சொப்பன சுந்தரி, தண்டட்டி, பொன் மாணிக்கவேல் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தீபா தனது வெள்ளந்தியான காமெடி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இதற்கிடையில் குக் வித் கோமாளி, Mr & Mrs சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் தீபா கலந்து கொண்டார்.
இப்படியான நிலையில் திருவண்ணாமலையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் பேசிய தீபா, “உலகமே போட்டிப் போட்டுக் கொண்டு போகிறது. என் பிள்ளை பெருசா, உன் பிள்ளை பெருசான்னு என நம்முடைய பொறமை குணத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு அதை குழந்தைகள் மீது திணித்து அவர்களின் குழந்தைத்தனத்தை பெற்றோர்கள் மறக்கடிக்கிறார்கள். இன்னொரு சம்பவம் சொல்ல வேண்டும். டிவியில் எல்லாம் குழந்தைகள் டான்ஸ், பாடுவது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.
View this post on Instagram
நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அந்த குழந்தைகளை தாய்மார்கள் எவ்வளவு செய்கிறார்கள் என பார்த்திருக்கிறேன். அவர்கள் மனநலம் பாதிக்கும் அளவுக்கு பாடாய்படுத்துகிறார்கள். என் குழந்தை உலகம் அறியும் வகையில் பெரிய ஆளாக வர வேண்டும் என நினைக்கிறார்கள். இயற்கையிலேயே உங்கள் குழந்தைக்கு திறமை இருந்தால் யாரும் மறைக்க தேவையில்லை. எப்படி வேண்டுமாலும் அது வெளிப்பட்டு விடும். குழந்தைகள் ஒன்றும் நீங்கள் சொல்வது போல ஆடுவதற்கு உங்கள் கையில் இருக்கும் குரங்கு பொம்மைகள் இல்லை என தீபா கடுமையாக பேசியுள்ளார்.அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க: 'அண்ணாத்த' வாய்ப்பை மிஸ் பண்ணிட்டனே என வருத்தம்... பாகுபாடு பார்க்கமாட்டேன்... மனம் திறந்த தீபா