அவுத்துபோட்டு காட்டுனா வாய்ப்பு கிடைச்சிருமா... பூமர் ஆண்களுக்கு ஷிவாங்கி கொடுத்த செம ரிப்ளை
ஷார்ட்ஸ் அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோஸ் பதிவிட்டதால் பல விமர்சனங்களை எதிர்கொண்டார் ஷிவாங்கி. இதற்கு செம ரிப்ளை ஒன்றை தற்போது கொடுத்துள்ளார்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியின் மூலம் மக்களை கவர்ந்தவர் ஷிவாங்கி. அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு பெரியளவில் ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. நகைச்சுவையான சுபாவத்திற்காகவே ஷிவாங்கிக்கு பல் ரசிகர்கள் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த டான் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஷிவாங்கி மீது விமர்சனம்
ஷிவாங்கி சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்களின் கீழ் பலர் அவரை விமர்சித்து கமெண்ட் செய்திருந்தார்கள். பப்ளிசிட்டிக்காக கவர்ச்சியாக ஆடை அணிந்து ஷிவாங்கி இந்த புகைப்படங்களை வெளியிடுவதாக அவர்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு ஷிவாங்கி செம ரிப்ளை கொடுத்துள்ளார்
" எனக்கு ஷார்ட்ஸ் போட வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால் என் உடல் அதற்கு ஏற்ற உடல் இல்லை. இதனால் அந்த விஷயத்தில் நான் ரொம்ப தாழ்வுமனப்பான்மை உடையவளாக இருந்தேன். சமீபத்தில் தான் நான் ஷார்ட்ஸ் அணிந்தேன் அது எனக்கு ரொம்ப சரியாக செட் ஆனது. அதனால் அந்த தாழ்வு எண்ணமும் போய்விட்டது. ஆனால் இந்த புகைப்படங்களை நான் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டால் வாய்ப்புக்காக இந்த பொண்ணு அவுத்துப்போட்டு நிக்குது என சொல்வார்கள். அதற்காக அவர்களிடம் நான் இதை என் உடம்பை காட்ட பதிவிடவில்லை என்று சொல்லிட்டா இருக்க முடியும்.
Dress வெச்சு பெண்களை Social Media ல Character Assasinate பண்ற Regressive Mindset உள்ளவங்களை, சிரிச்சிக்கிட்டே செருப்ப கழட்டி அடிச்சாப்ல ஒரு Reply 👏 @sivaangi_k on Fire 💙🫡🔥 pic.twitter.com/Fz9sJb9lJg
— தோழர் ஆதி (@RjAadhi2point0) March 13, 2025
கட்டுப்பாடுகள் உள்ள குடும்பத்தில் இருந்து வரும் ஒரு பெண் , அவள் எப்போதும் சேலை சுடிதார் மட்டுமே அணிந்திருந்து முதல் முறையாக ஜீன்ஸ் போட்டு அது அவளுக்கு பிடிக்கலாம். அது அவளுக்கு ஒரு வெற்றிதான். அதற்காக அவரது கேரக்டர் மாறிவிட்டது என்றில்லை. எல்லா பொண்ணுங்களுக்கு அவுத்துப்போட்டு காட்டனும்னு ஆசை கிடையாது. அவுத்துப்போட்டு காட்டினால் வாய்ப்பு வந்திருமா..எனக்கு அடிக்கடி இந்த ஆத்திரம் வரும். நமக்கு செட்டே ஆகாதுனு நினைக்கும் சில விஷயங்களை ட்ரை பண்ணி பார்ப்பது தான் என்பதை நிறைய பேர் புரிந்துக் கொள்வதே இல்லை" என ஷிவாங்கி தெரிவித்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

