தமிழ்நாடு பட்ஜெட் 2025 - மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்
2025 -2026 நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதி, விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்பிகள் மகளிருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மகளிர் சுயஉதவிக்குழுக்களைப் பொறுத்தவரை 10,000 சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். 37,000 கோடி ஒதுக்கீடு.
புதிதாக 10 இடங்களில் பணிபுரியும் 800 பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும். அதற்காக 77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக 3600 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 13, 807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும்.
கருப்பைவாய் புற்றுநோயைத் தடுக்க 14 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரையில் தலா 1000 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவியர் விடுதி 275 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கிறது.