அதெல்லாம் சுத்த பொய்... ரவி மோகனை மருந்து கொடுத்து மயக்கி வைத்திருக்கும் கெனிஷா! நடிகை பேச்சால் பரபரப்பு!
ரவி மோகனுக்கு கெனிஷா மயக்க மருந்து கொடுத்து, மயக்கி வைத்திருப்பதாக நடிகை சார்மிளா பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ளார்.

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவகாரம் தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி உள்ளது. ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றம் வரை சென்றார். இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், தனக்கு ரூ.40 லட்சம் வரை ஜீவனாம்சம் வேண்டும் என்று ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்த்தி மற்றும் ரவி மோகன்
இதற்கு வரும் ஜூன் மாதத்திற்குள்ளாக ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஆர்த்தி மற்றும் ரவி மோகன் இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

ரவி மோகனின் இந்த பிரிவிற்கு கெனிஷா தான் காரணம் என்று பலரும் அவரை குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கேற்ப ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். இந்த நிலையில் தான் 'வாவ் தமிழா' நிகழ்ச்சியில் நடிகை சார்மிளா... பேசும் போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சார்மிளா கருத்து:
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ஏற்கனவே கெனிஷாவை திட்டி சுசீந்திரா ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் கெனிஷா தெரபிஸ்ட் கிடையாது. அவர் ரவி மோகனுக்கு மயக்கம் மருந்து கொடுத்து மயக்கி வைத்திருக்கிறார். ரவி மோகனும் உண்மையாகவே காதலிக்கவில்லை. இது காதலும் கிடையாது. இந்த சம்பவம் முதல் மரியாதை படத்தை நினைவுபடுத்துகிறது.

ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு 2 குழந்தைகள் இருக்கிறது. அந்த குழந்தைகளுக்காக ஆர்த்தி எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார். ரவி மோகன் தான் தனது மாமியார் படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவரும் தனது மருமகனுக்காக படமும் தயாரித்தார். அதற்கு ரவி மோகனும் தனக்கு சம்பளம் தரவில்லை என்று கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்று சார்மிளா கூறியிருக்கிறார் இவரின் இந்த பேச்சு தற்போது விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.





















