துறு துறு பானுப்ரியா ரொம்ப அமைதியா மாறுனாங்க.. இவ்வளவு கஷ்டமா? இப்படியும் ஒரு கதை..
திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த பானுப்பிரியாவை அவரது கணவர் ஊக்கப்படுத்தி தொடர்ந்து நடிக்க அறிவுறுத்தியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் 80 காலக்கட்டங்களில் கோலிவுட்டில் ஒரு வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. இயல்பான எதார்த்தமான நடிப்பு ,பட படக்கும் பேச்சு , பெரிய கண்கள் , இலட்சனமான முகம் என பானுப்பிரியாவை பாராட்டதவர்கள் இருக்கவே முடியாது. பானுப்பிரியாவை பாரதிராஜாதான் ஒரு ஃபோட்டோ ஷூட் செய்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் அவரது இயக்கத்தில் பானுப்பிரியா நடிக்க முடியாமல் போனது வருத்தம்தான் என நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
பானுப்பிரியாவின் இயற்பெயர் பானுதான். அவர் சினிமாவில் நடிக்க தொடங்கியதும் பானுவுடன் பிரியாவையும் இணைத்துக்கொண்டார். 80களில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ரஜினி, சத்தியராஜ், விஜயகாந்த் என பலருக்கும் ஜோடியாக நடித்தார் பானுப்பிரியா. 80 , 90 களில் முக்கியமான நடிகையாக வலம் வந்த பானுப்பிரியா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு , மலையாளம் , இந்தி என முக்கிய மொழி திரைப்படங்களில் எல்லாம் கலக்கினார்.
View this post on Instagram
பிஸியாக நடித்து வந்த பானுப்பிரியாவிற்கு நடிப்பை போலவே நடனத்திலும் அதீத ஆர்வமுண்டு. சிறு வயதிலிருந்தே நடனத்தை முறையாக கற்ற பானுப்பிரியா ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட. 80 முதல் 93 இன் ஆரம்ப காலகட்டம் வரையிலும் படு பிஸியாக நடித்த பானுப்பிரியா அதன் பிறகு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
View this post on Instagram
பானுப்பிரியா அமெரிக்காவில் செட்டில் ஆனாலும் அவரின் திறமையை கோலிவுட் பயன்படுத்த தவறவில்லை. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த பானுப்பிரியாவை அவரது கணவர் ஊக்கப்படுத்தி தொடர்ந்து நடிக்க அறிவுறுத்தியிருக்கிறார். அதனால அவ்வபோது அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து நடித்துவிட்டு செல்வாராம். இப்படி நடித்து வந்த சூழலில்தான் பானுப்பிரியாவிற்கு விவாகரத்து ஆகிவிட்டது என்ற செய்தியும் வெளியாக தொடங்கியிருக்கிறது. இதனை அறிந்த அவர் , அது தன்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியதாகவும் , கணவரின் விருப்பப்படிதான் நடிக்க வந்தேன் ..ஊடகங்கள் இப்படியாக எழுதும் என எதிர்பார்க்கவில்லை என நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். துறு துறு என இருந்த பானுப்பிரியா குழந்தை , குடும்பம் என ஆனதும் பக்குவமானவராகிப்போனார். ஜாலியாக பட்டாம்பூச்சி போல வலம் வந்த பானுப்பிரியா அமைதியான அம்மாவாகவும் மனைவியாகவும் நடிகையாகவும் இருப்பதை பார்த்த அவரது திரையுலக நண்பர்களே ஆச்சர்யப்பட்டார்களாம்.பானுப்பிரியா கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்து வந்திருந்த சமயத்தில்தான் , அவரது கணவர் திடீரென மாரடைப்பால் காலமானார். அந்த சம்பவம் தன் வாழ்நாளில் மிகப்பெரிய துயர நாள் என்னும் பானுப்பிரியா , சிங்கிள் மதராக தனது குழந்தையை வளர்த்து வருகிறார்.அதே சமயம் சினிமாவையும் அவர் கைவிடவில்லை. குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.