மேலும் அறிய

‛தேவியை சக்திப்படுத்த நேரம் ஒதுக்குங்கள்’ அப்படியே முழுசா மாறிய அமலா பால்!

கடாவர் வெற்றியில் சிலாகித்துப் போன அமலா, நீண்ட தூரத்திற்குப் பின் கிடைத்த வெற்றியை கொண்டாடி வருகிறார்

சிந்துசமவெளி படத்தில் அறிமுகமாகி, அதன் பின் காணாமல் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் அமலா பால். அடுத்த வந்த மைனா  திரைப்படம், அமலா பாலை தவிர்க்க முடியாத கதாநாயகியாக்கியது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் படுபிஸியாக இருந்த அமலாபால், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தார்.

அந்த காதல் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்காத நிலையில், இருவரும் பிரிந்தனர். பிரிவுக்குப் பின் இன்னும் பிஸியாக தன்னை மாற்றிக் கொண்ட அமலாபால், பலதரப்பட்ட கதைகளை தேர்வு செய்து, நடிக்கத் தொடங்கினார். பல நடிகைகள் தயங்கும் கதாபாத்திரங்களை அவர் துணிந்து செய்யத் தொடங்கினார். 

அதுமட்டுமின்றி, இன்ஸ்டாகிராமில் அமலாபால் அதிக ஆக்டிவாக இருந்தார். அவரது கவர்ச்சி போட்டோக்கள், அடுத்தடுத்து இன்ஸ்ட்டாகிராமில் வெளிவரத்தொடங்கியது. இதனால் அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. 

View this post on Instagram
 
A post shared by Amala Paul (@amalapaul)

இதற்கிடையில் கடாவர் என்கிற படத்தில் அவர் நடித்தார். முழுக்க ஹீரோயின் கதையான அந்த படத்தின் தயாரிப்பு பொறுப்பையும் அமலா ஏற்றார். அந்த படத்தை வெளியிடவிடாமல் பலர் தொந்தரவு செய்ததாக அமலா பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில், கடந்த வாரம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் கடாவர் வெளியாகி, பெரிய பாராட்டை பெற்றது. அமலா பாலுக்கும் பெரிய அளவிலான பெயரை அந்த படம் பெற்றுத் தந்தது. 

கடாவர் வெற்றியில் சிலாகித்துப் போன அமலா, நீண்ட தூரத்திற்குப் பின் கிடைத்த வெற்றியை கொண்டாடி வருகிறார். இதற்கிடையில் தனது சொந்த மாநிலமான கேரளாவில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்ற அமலா, அதற்காக அங்குள்ள பாரம்பரிய ஆடையை அணிந்து, நெற்றியில் திருநீர் அணிந்து வித்யாசமான தோற்றத்தில் அழகாக தென்பட்டார்.

அமலாபால் இதற்கு முன் இதுமாதிரி தோற்றத்தில் வந்ததில்லை. அவர் பதிவிட்டதும் இல்லை. அழகான கேரள உடையில், அசத்தலான தோற்றத்தில் அமலாவை பார்க்கவே ரம்மியமாக இருந்தது. தனது பதிவையும் அவர் வெறுமனே போட்டோவாக பதிவிடாமல், சில கருத்துக்களை வைத்த, தனக்கான பாணியில் பதிவு செய்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Amala Paul (@amalapaul)

‛அவர்கள் கேட்க நீங்கள் ஏன் பிரார்த்தனை செய்கிறீர்கள்? பெண் ஆற்றலுக்கும், வளர்ப்பு மற்றும் மென்மையான அன்பான கவனிப்பு தேவை; அதற்கு சக்தி பதிலளிக்கிறார். உள்ளே இருக்கும் தேவியை சக்திப்படுத்த நேரம் ஒதுக்குங்கள். அவளுடைய வலிமையை அழைக்கவும், சக்தி ~ சுதந்திரமாக ஓடட்டும்!’

என்று தனது பதிவில் அமலா குறிப்பிட்டுள்ளார். அமலாவின் இந்த அழகான போஸ்டை பலரும் பகிர்ந்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Embed widget