Yogi Babu: புத்தாண்டு தரிசனம் செய்ய சென்ற யோகிபாபு... காக்கவைக்கப்பட்டாரா? என்னாச்சு?
இன்று புத்தாண்டு தினத்தில் கோயிலுக்கு வழிபடச் சென்ற யோகிபாபு ஒரு மணி நேரம் காக்கவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருத்தணியில் சாமி தரிசனம் செய்யச் சென்ற யோகிபாபு ஒரு மணி நேரம் காக்கவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் யோகிபாபு தற்போது கதாநாயகனாகவும் கோலிவுட்டில் கலக்கி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' மூலம் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய யோகி பாபு, அமீரின் யோகி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
தொடர்ந்து தன் தனித்துவ தோற்றம், நடிப்புத் திறமை காரணமாக சூது கவ்வும் அட்டக்கத்தி, டிமாண்டி காலனி, ஆண்டவன் கட்டளை படங்கள் மூலம் யோகி பாபு கவனம் ஈர்த்தார். தொடர்ந்து மெர்சல், கோலமாவு கோகிலா, விசுவாசம், பிகில் உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
இதனை அடுத்து தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக யோகிபாபு களம் இறங்கினார். இதில் மண்டேலா திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இவர் நடித்துள்ள பொம்மை நாயகி படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இன்று புத்தாண்டு தினத்தில் கோயிலுக்கு வழிபடச் சென்ற யோகிபாபு ஒரு மணி நேரம் காக்கவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் இன்று (ஜன.01) ஆங்கில புத்தாண்டையோட்டி யோகிபாபு சாமி தரிசனம் செய்யச் சென்ற நிலையில், கோயில் நிர்வாகம் அலட்சியம் காட்டியபடி அவரைக் காக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
View this post on Instagram
மற்றோருபுறம் கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட யோகி பாபு, சமீப காலமாக தான் கிரிக்கெட் விளையாடும் இன்ஸ்டா வீடியோக்களைப் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.





















