![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: வெளிநாட்டு பெண்ணுடன் டேட்டிங், முகத்தை மறைத்துக்கொண்டு ஓடிய விஷால்? வைரலாகும் வீடியோ!
Actor Vishal: சினிமா, அரசியலை நோக்கிய பயணம் என பிஸியாக வலம் வரும் விஷால், மற்றொருபுறம் பல ஆண்டுகளாக சிங்கிளாகவே வலம் வரும் சூழலில் தொடர்ந்து காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார்.
![Watch Video: வெளிநாட்டு பெண்ணுடன் டேட்டிங், முகத்தை மறைத்துக்கொண்டு ஓடிய விஷால்? வைரலாகும் வீடியோ! actor vishal roaming with a foreign girl in nyc video goes viral Watch Video: வெளிநாட்டு பெண்ணுடன் டேட்டிங், முகத்தை மறைத்துக்கொண்டு ஓடிய விஷால்? வைரலாகும் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/471fb59caf505b4824e9718de8c217c31703579294102574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இளம்பெண் ஒருவருடன் நடிகர் விஷால் (Vishal) வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
46 வயதாகும் நடிகர் விஷால் தொடர்ந்து சிங்கிளாக வலம் வருகிறார். செல்லமே படத்தில் 2004ஆம் ஆண்டு அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் கோலோச்சி வருகிறார்.
நடிப்பு தாண்டி தயாரிப்பு, நடிகர் சங்கப் பணிகள் என வலம் வரும் விஷால், தேர்தல் அரசியலைக் குறிவைத்து தன் ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கமாக மாற்றி செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு, மற்றும் தென் தமிழக மழை வெள்ள பாதிப்பு என அனைத்திலும் இவரது இயக்கம் மக்களுக்காக களமிறங்கி பணி செய்தது.
இந்நிலையில் சினிமா, அரசியலை நோக்கிய பயணம் என பிஸியாக வலம் வரும் விஷால், மற்றொருபுறம் பல ஆண்டுகளாக சிங்கிளாகவே வலம் வரும் சூழலில் தொடர்ந்து காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார்.
முன்னதாக நடிகை வரலட்சுமி சரத்குமாரும் விஷாலும் காதலிப்பதாகவும் ஆனால் பல்வேறு காரணங்களால் இவர்களது காதல் முறிந்ததாகவும் தகவல்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து அனிஷா அல்லா ரெட்டி எனும் தெலுங்கு நடிகையுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் கருத்து வேறுபாடுகளால் இந்த நிச்சயதார்த்தம் கல்யாணம் வரை செல்லாமல் நின்று போனதாகக் கூறப்பட்டது.
இதனை அடுத்து சமீபத்தில் விஷாலுக்கும் நடிகை லட்சுமி மேனனுக்கும் விரைவில் திருமணம் என கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், தன்னைப் பற்றி தகவல் பரப்பியவர்களை கடுமையாக சாடி, விஷால் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது விஷால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இளம்பெண் ஒருவருடன் வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் விஷால் சற்று இளமையாகத் தோற்றமளிக்கும் நிலையில், இது பழைய வீடியோவா, இல்லை மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவா என பல கேள்விகள் எழுந்துள்ளன.
வீடியோ எடுப்பவர் விஷால் என அழைத்ததும் உடனடியாக விஷால் தன் முகத்தை ஹூடி உடையால் மறைத்துக் கொண்டு ஓடும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Vishal | #NewYork
— Satheesh (@Satheesh_2017) December 26, 2023
Is that Actor @VishalKOfficial walking with someone in NYC 🤔
என்ன கொலை குற்றம் பண்ண மாதிரி, பேர் சொல்லி கூப்பிட்டதும் அலறி அடிச்சு ஓடுறாரு....!
மாட்டிகிட்டோம்னு பயந்துட்டாரா?
யாரா இருக்கும் அந்த பொண்ணு? pic.twitter.com/IJx6gyqsNK
மேலும் இது அவரது அடுத்த படத்துக்கான ப்ரொமோஷனா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)