குடும்பத்துடன் பெண் கேட்க போன விஷால்... சினிமா ஸ்டைலில் கீர்த்தி சுரேஷ் கொடுத்த ரிப்ளை
நடிகர் விஷாலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு விஷாலின் பெற்றோர்கள் சென்றதாகவும் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது காதலை வெளிப்படையாக அறிவித்தார். கூடிய விரைவில் அவருக்கு திருமணமும் ஆக இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் பள்ளியில் இருந்து தன்னுடன் சேர்ந்து பயின்ற ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வருகிறார். 15 ஆண்டுகாலமாக இருவரும் காதலித்து வருவதாகவும் தற்போது இரு வீட்டாரது சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷ்-க்கும் அவரது நீண்ட நாள் காதலருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் மிக எளிமையாகவும் அதைதொடர்ந்து, பிரமாண்ட வரவேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்குப் பின் கீர்த்தி சுரேஷ் கிறித்தம மதத்திற்கு மதமாற்றம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
கீர்த்தி சுரேஷை பெண் கேட்ட விஷால்
கடந்த ஓராண்டு காலமாக கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவருகின்றன. இதில் சில தகவல்கள் வெறும் வதந்திகள் என்றாலும் சில தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டு உள்ளன. நடிகரும் மூத்த திரைத்துறை ஆளூமையுமான சித்ரா லட்சுமணன் தனது யூடியுப் சேனலில் பலர் அறியாத தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவாது சண்டைக்கோழி 2 படப்பிடிப்பின் போது விஷாலின் பெற்றோர்கள் கீர்த்தி சுரேஷை பார்த்து அவர்களுக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. கீர்த்தி சுரேஷை தங்கள் மகன் விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் விருப்பப் பட்டுள்ளார்கள். விஷாலின் பெற்றோர்கள் இயக்குநர் லிங்குசாமியுடன் ரொம்ப நெருக்கமானவர்கள் என்பதால் அவர் மூலம் இந்த மேட்டரை டீல் செய்துள்ளார்கள். லிங்குசாமியும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி கீர்த்தியிடம் விஷாலின் பெற்றோர்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளார். அப்போதுதான் கீர்த்தி சுரேஷ் தான் பல வருடங்களாக ஒருத்தரை காதலித்து வருவதாகவும் அவரைதான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ள இந்த தகவல் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
After #Sandakozhi2 #Vishal & his family had hoped for a wedding alliance with #KeerthySuresh 😳 but she had other long-term plans - @chithralax Sir
— gowri_gal (@gowri_gal) December 1, 2024
🎥: @ToouringTalkies pic.twitter.com/9VBR8AHpC7