Actor Vijay: சினிமாவை விட்டு விலகும் விஜய்.. வெங்கட் பிரபு படம்தான் கடைசியா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் விரைவில் சினிமாவை விட்டு விலகப் போவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Actor Vijay: சினிமாவை விட்டு விலகும் விஜய்.. வெங்கட் பிரபு படம்தான் கடைசியா? - அதிர்ச்சியில் ரசிகர்கள் actor vijay plan to quit cinema and concentrate on political carrier Actor Vijay: சினிமாவை விட்டு விலகும் விஜய்.. வெங்கட் பிரபு படம்தான் கடைசியா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/3c79aca6561e8e2a40219bc31756286f1687101771220572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் விரைவில் சினிமாவை விட்டு விலகப் போவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் என்னதான் பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமானாலும் அவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைத்து விடவில்லை. படிப்படியாக முன்னேறி தனக்கென தனியிடம் பிடிக்க போராடுவது ஒரு தனிக்கதை தான். அப்படியான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்.
விஜய் நடிக்கும் படம் தாறுமாறாக வசூல் செய்யும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் தான் அவரது படமும் இருக்கும் என்பது விஜய்க்கான பிளஸ் பாய்ண்ட்டாக அமைந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா என பிற மாநிலங்களிலும் விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபகாலமாக விஜய் நடிக்கும் படங்கள் பேன் இந்தியா அளவில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
அடுத்ததாக விஜய் நடிப்பில் பேன் இந்தியா படம் வெளியாகவுள்ளது. வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் இருந்து முதல் பாடலாக ‘நான் ரெடி’ பாடல் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இப்படியான நிலையில் விஜய் தனது 68வது படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுடன் இணையவுள்ளார். யுவன் இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தநிலையில் இதுவே விஜய் நடிக்கும் கடைசி படமாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளது.
விஜய்யின் அரசியல் ஆசை
என்னதான் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் விஜய் தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நேற்று 10 மற்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். இது இந்திய அளவில் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதுவே அவரின் அரசியல் பயணத்துக்கான தொடக்கப்புள்ளியாக பார்க்கப்படுகிறது,.
விஜய்யின் அரசியல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலை நோக்கி இருக்கும் என கூறப்பட்டாலும், 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் தான் அவரின் குறிக்கோளாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் தொடங்கி விட்டதாக மக்கள் இயக்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. அரசியல் பணிகளுக்காக களமிறங்கினால் ‘தளபதி 68’ தான் விஜய்யின் கடைசிப்படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)