Watch Video : மேடையில் கலக்கும் நடிகர் விதார்த்தின் குட்டி மகள்... பாராட்டுகளை குவிக்கும் வீடியோ!
Watch Video : நடிகர் விதார்த் மகள் காதம்பரியின் மேடை நாடக வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விதார்த். பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர் விதார்த், 'திருவண்ணாமலை' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இருப்பினும் 2010ம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'மைனா' படத்தின் மூலம் கவனம் பெற்று பிரபலமானார். அப்படம் அவருக்கு நல்ல ஒரு பாராட்டை பெற்று கொடுத்ததுடன் அடுத்தடுத்து பல வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தது.
வீரம், காடு, ஒரு கிடாயின் கருணை மனு, குற்றமே தண்டனை, முப்பரிமாணம், மகளிர் மட்டும், குரங்கு பொம்மை, காற்றின் மொழி, ஆயிரம் பொற்காசுகள், பயணிகள் கவனிக்கவும், இறுகப்பற்று உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான லாந்தர், அஞ்சாமை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளையும் குவித்தது.
2015ம் ஆண்டு காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் விதார்த். இந்த தம்பதியருக்கு 7 வயதில் காதம்பரி என்ற மகள் ஒருவர் இருக்கிறார். தன்னுடைய மகள் ஸ்டேஜ் பர்பாமன்ஸ் செய்யும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகிறது. இந்த வயசில் இப்படி ஒரு திறமையா என பலரும் பாராட்டி இந்த வீடியோவை பலரும் நடிகர் விதார்த் மகளை பாராட்டி வருகிறார்கள்.
Actor Vidharth’s 7Yrs old Daughter 👌👍💥 pic.twitter.com/Xno4zFCQB4
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 11, 2024
மின்னலே, சண்டக்கோழி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் ஹீரோவின் நண்பன், அடியாட்களில் ஒருவர் இப்படி பல சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் டர்னிங் பாயிண்ட் படமாக அமைந்தது 'மைனா' திரைப்படம். திறமையான நடிப்பு இருந்தும் சரியான வாய்ப்புகள் அமையாததால் சினிமா துறையில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆனாலும் அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் விடாமுயற்சியுடன் இன்றும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்து பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
சமீபத்தில் விதார்த் நடிப்பில் நீட் தேர்வை மையமாக வைத்து வெளியான 'அஞ்சாமை' படத்தில் வெகு சிறப்பான ஒரு தந்தையாக நடித்திருந்தார். நிஜ வாழ்க்கையிலும் நல்ல ஒரு தந்தையாக மகளை பார்த்து ரசிக்கும், ஆச்சரியப்படும் ஒரு தந்தையாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் தன்னுடைய மகளின் மேடை நாடக வீடியோ அவருக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்கும்.