மேலும் அறிய
Actor Vadivelu: ராமேஸ்வரத்தில் மோட்ச தீபம் ஏற்றிய வடிவேலு யாருக்காக அழுதார்...கேப்டனின் நினைவு வந்ததோ.., மோட்ச தீபம் ஏற்றி பாவங்களை கழுவிக்கொண்டாரா....?
ராமேஸ்வரம் வந்தார் வடிவேலு மோட்ச தீபம் ஏற்றி கண்கலங்கிய அவரின்.. நினைவில் சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் வந்தாரா...?

ராமேஸ்வரம் கோயிலில் விளக்கேற்றும் வடிவேலு
இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றினால் அவர்களின் ஆன்மா சாந்தி அடையும் மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக நடைமுறையில் இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ் திரை உலகின் காமெடியில் அசைக்க முடியாத உச்சத்தில் இருக்கும் வடிவேலு நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு பிரகாரங்களில் சுற்றி வந்து மூலஸ்தானத்தில் ராமநாதசாமியை வணங்கி வழிபட்டார். அவரை கண்டதும் அங்கு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பொதுமக்களும் ரசிகர்களும் அவருக்கு உற்சாக குரல் எழுப்பி வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து மோட்ச தீபம் ஏற்றுவதில் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மோட்ச தீபம் ஏற்றினார் வடிவேலு. அப்போது ஒரு நிமிடம் கண்ணை மூடிய அவர் கண்கலங்கி கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடியது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மோட்ச தீபம் ஏற்றும்போது கண்கலங்கிய நடிகர் வடிவேலு…யாருக்காக அழுதார்?#Vadivelu #rameshwaram #Vadivel #TamilNews pic.twitter.com/xo0YeBeU6d
— ABP Nadu (@abpnadu) February 7, 2024
வடிவேலின் தாயார் மறைந்து ஓராண்டுக்கும் மேலாகிறது. ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறைந்த கேப்டன் என்று தமிழ் திரை உலகத்தினரால் அழைக்கப்படும் தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாததும், ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது பெரும் பேசு பொருளாகியது.

இந்த நிலையில், ஒரு காலகட்டத்தில் தான் முன்னுக்கு வருவதில் கேப்டன் விஜயகாந்துக்கும் ஒரு பங்கு உண்டு என்பது நடிகர் வடிவேலுவின் ஆழ்மனதில் உண்டு என அவருடன் நெருங்கி பழகிய நடிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இன்னும் விஜயகாந்த் மறைந்த அன்று தனது வீட்டிற்குள் இருந்து அவர் அழுது தீர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரம் வந்து மோட்ச தீபம் ஏற்றியது ஒரு வேலை விஜயகாந்த் மறைவிற்கு தான் நேரில் செல்ல முடியாததை கருத்தில் கொண்டு அவருக்காக மோட்ச தீபம் ஏற்றி இருக்கலாம் மற்றும் தன் தாயாரையும் நினைத்து ஏற்றியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. எது எப்படியோ நடிகர் வடிவேலு மோட்ச தீபத்தை ஏற்றி தன் பாவங்களை கழுவிக் கொண்டார் என்று கூறலாம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion