மீண்டும் வில்லன் அவதாரம்... அடுத்தடுத்து பெரும் இயக்குனர்களின் படங்கள்... மிரட்டும் சூர்யா!
24 படத்தின் இயக்குநர் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருவதாகவும் சூர்யா இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
24 படத்தின் இயக்குநர் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருவதாகவும் சூர்யா இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி, கோவா போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.
View this post on Instagram
மேலும், ’இன்று நேற்று நாளை’, ’அயலான்’ படங்களின் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருவதாகவும், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் விக்ரம் குமாரின் ‘24’ படத்தில் சூர்யா ஏற்கெனவே சைண்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து, இந்தப் படத்திலும் சூர்யா சைண்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வந்தன.
மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.
View this post on Instagram
முன்னதாக விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் தோன்றியிருந்தார். இந்தப் பாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்சை சூர்யாவுக்கு பரிசாக அளித்து அவரை கவுரவித்தார்.
View this post on Instagram
இந்நிலையில் விக்ரமைத் தொடர்ந்து 24 படத்தின் அடுத்த பாகத்திலும் சூர்யா மீண்டும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சிறுத்தை சிவாவுடன் அடுத்து சூர்யா கைக்கோர்க்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.