மேலும் அறிய

Surya 41: 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சூர்யா - பாலா கூட்டணி.. 5 புதிய தகவல்கள் இதோ...

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வரும் `சூர்யா 41’ திரைப்படத்தின் அப்டேட்கள் இதுவரை வெளியாகவில்லை என்னும் நிலையில், இந்தத் திரைப்படத்தைக் குறித்த 5 தகவல்களை இங்கே வெளியிட்டிருக்கிறோம்... 

கடந்த மார்ச் 28 அன்று, நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா ஆகியோர் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `சூர்யா 41’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், சூர்யா நடிகராக நடிக்கும் 41வது திரைப்படமாகவும், தயாரிப்பாளராக 15வது திரைப்படமாகவும் அமைய இருக்கிறது. ஜோதிகா, சூர்யா தம்பதியின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பை மேற்கொண்டிருக்கிறது. 

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வரும் `சூர்யா 41’ திரைப்படத்தின் அப்டேட்கள் இதுவரை வெளியாகவில்லை என்னும் நிலையில், இந்தத் திரைப்படத்தைக் குறித்த 5 தகவல்களை இங்கே வெளியிட்டிருக்கிறோம்... 

1. `சூர்யா 41’ படப்பிடிப்பின் முதல்கட்டப் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் நடைபெற்று வருகின்றன. 

தமிழ்நாட்டின் முனையில் இருக்கும் அழகான கடற்கரை நகரமான கன்னியாகுமரியில் இந்தத் திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கப்படுவதாக, 2டி எண்டெர்டெயின்மெண்ட் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அதற்கான பூஜை நடைபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

Surya 41: 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சூர்யா - பாலா கூட்டணி.. 5 புதிய தகவல்கள் இதோ...

2. 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சூர்யா - பாலா கூட்டணி!

இயக்குநர் பாலாவும் நடிகர் சூர்யாவும் இணையும் நான்காவது திரைப்படம் இது. இதற்கு முன்பாக, பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம், லைலா ஆகியோர் நடித்து, தேசிய விருது பெற்ற `பிதாமகன்’ திரைப்படத்திலும், சூர்யாவின் நடிப்புப் பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமான `நந்தா’ ஆகியவற்றில் முன்னணி வேடங்களில் சூர்யா நடித்திருந்தார். தொடர்ந்து, ஆர்யா, விஷால் ஆகியோர் நடித்திருந்த `அவன் இவன்’ திரைப்படத்திலும் கேமியோ காட்சியில் நடித்திருந்த சூர்யா, தற்போது18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணைந்திருக்கிறார். 

3. கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட திரைப்படம் இது!

கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் இயக்குநர் பாலா, தன் தந்தையும் நடிகருமான சிவகுமார் ஆகியோருடன் இருக்கும் படத்தைப் பதிவிட்ட நடிகர் சூர்யா, `நான் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையை விட அதிகம் நம்பிக்கை கொண்டவர் பாலா.. புதிய உலகங்களை நான் அனுபவிக்கச் செய்தவர் இவர்.. பாலாவுடன் மீண்டும் ஒரு அழகான பயணத்தைத் தொடங்குகிறேன்’ என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். 

Surya 41: 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சூர்யா - பாலா கூட்டணி.. 5 புதிய தகவல்கள் இதோ...

4. க்ரித்தி ஷெட்டி, மமிதா பைஜூ முன்னணி நடிகர்களாகத் தேர்வு!

`ஷ்யாம் சிங்கா ராய்’ தெலுங்குத் திரைப்படம் மூலமாக புகழ்பெற்ற தெலுங்கு நடிகை க்ரித்தி ஷெட்டி இந்தத் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரோடு மலையாள நடிகை மமிதா பைஜூ இந்தத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இவர்களின் கதாபாத்திரங்கள் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இரண்டு வேடங்களில் ஒரு கதாபாத்திரம் செவித்திறன், பேச்சுத் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி வேடம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

5. இசை, பிற தொழில்நுட்பப் பணிகளில் யார்?

`சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தத் திரைப்படத்திற்குப் பின்னணி இசையை அமைத்துள்ளார். மேலும், சூர்யா - வெற்றிமாறன் இணையும் `வாடிவாசல்’ திரைப்படத்திற்கும் இவரே இசையமைப்பாளர். 

கலை இயக்குநராக வி. மாயாண்டி, படத்தொகுப்பாளராக சதிஷ் சூர்யா, ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம் ஆகியோர் பணியாற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget