Actor Srikanth: போதைப் பொருள் வழக்கு; நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமில்ல.. லிஸ்ட் இன்னும் பெருசு! சிக்குவார்களா தமிழ் பிரபலங்கள்?
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகில் ரோஜாக்கூட்டம் என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகமானாவர் நடிகர் ஸ்ரீகாந்த். ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு என நல்ல உயரத்திற்கு கொண்டு சென்றிருந்த ஸ்ரீகாந்த் தற்போது பெரியளவு வெற்றிப்படங்கள் இல்லாமல் உள்ளார். இந்த நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்:
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதாவது, நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப் பொருள் வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள பிரசாத்திற்கும் ஸ்ரீகாந்திற்கும் அவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக பழக்க வழக்கம் உள்ளது. பிரசாத்திடம் கடந்த 5 ஆண்டுகளாக பிரசாந்த் போதைப்பொருள் வாங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணா விரைவில் கைது:
மேலும், இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி பிரபல நடிகர் கிருஷ்ணாவிற்கும் தாெடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பெயரும் போலீசார் விசாரணையில் அடிபட்டிருப்பதால் விரைவில் அவரையும் போலீசார் கைது செய்வார்கள்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து பார்ட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த பார்ட்டி கொண்டாட்டங்களில் மதுபானங்களுடன் சேர்த்து போதைப்பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அடுத்தடுத்து சிக்கப்போகும் பிரபலங்கள்:
தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் பிரசாத்தும் இதுபோன்ற மதுபான விடுதிகளில் நடக்கும் பார்ட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பது தெரிய வந்துள்ளது. இதனால், அவர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி மேலும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும் போதைப்பொருட்களை விநியோகம் செய்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெங்கட்பிரபு, பிரேம்ஜி, ஜெய், த்ரிஷா என தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து இதுபோன்ற கொண்டாட்டங்களில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள், இயக்குனர்கள் மட்டுமின்றி வளர்ந்து வரும் நடிகர்கள், நடிகைகள் பலரும் இதுபோன்ற கொண்டாட்டங்களில் பங்கேற்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி சீரியல் பிரபலங்களும் இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு தொடர்ச்சியாக செல்கின்றனர்.
போலீசார் தீவிர விசாரணை:
பிரசாத் பிரபலங்கள் பலரும் பங்கேற்ற மதுபான விருந்துகளில் பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பிரசாத்திடம் போதைப்பொருட்களை வாங்கினார்களா? பிரசாத்திற்கு எங்கிருந்து போதைப்பொருட்கள் கிடைத்தது? பிரசாத் போல வேறு யாரேனும் நபர்கள் பிரபலங்களுக்கு போதைப்பொருட்கள் விநியோகம் செய்கின்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















