Actor Soori Pongal wish: ”பொங்க பானையில பஞ்சு” - சூரியின் வாழ்த்து பதிவில் சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள்
குழந்தைகளுடன் பொங்கல் பானை, கரும்புகள் என அலங்காரத்துடன் பொங்கால் வாழ்த்துகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சூரி

புதுப்பட ரிலீஸோ பொங்கல் வாழ்த்துகளோ, நெட்டிசன்கள் கண்களுக்கு சிக்காத தகவல்களே இல்லை என சொல்லலாம். அந்த வரிசையில், தைத் திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூரி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவும் நெட்டிசனக்ளின் டிராலுக்கு சிக்கி இருக்கிறது.
குழந்தைகளுடன் பொங்கல் பானை, கரும்புகள் என அலங்காரத்துடன் பொங்கால் வாழ்த்துகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நடிகர் சூரி. ரசிகர்கள் பலரும் லைக் போட்டு பதில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஒரு சில பேரின் கண்களுக்கு மட்டும் சிக்கிய அந்த “பானை பஞ்சு” இப்போது ட்ரோல் மெட்டிரீயலாகி உள்ளது. “பொங்க பானையில ஏன் பஞ்சு வெச்சுரிக்கீங்க?” என ஒருவர் கமெண்ட் செய்ய, “நீங்களும் கண்டுபிடிச்சுட்டீங்களா?” என இன்னொருவர் கமெண்ட் செய்து கலாய்த்திருக்கிறார்.
View this post on Instagram
எது எப்படியோ, நெட்டிசன்களின் கண்களில் ஒன்று சிக்கிவிட்டால், வைரலாகி டிரெண்டாகிவிடுகிறது. சமூகவலைதள காலத்தில், எதை பதிவேற்றினாலும், ஒன்றுக்கு பலமுறை செக் செய்துவிட்டுதான் பதிவேற்ற வேண்டும் என்பதே ட்ரோல்கள் கற்றுத்தரும் பாடம்.
மேலும் படிக்க : Watch Avaniyapuram Jallikattu LIVE: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை: இடைவெளி இல்லாமல் HD தரத்தில் ABP நாடு Live-இல் பார்க்கலாம்....
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

